நிஷாவின் தோலை உரித்து, உறுப்புகளை வெட்டி.. 14 லிட்டர் வினிகர் ஏன்? சென்னை கூடுவாஞ்சேரி தம்பதி பகீர்
சென்னை: கூடுவாஞ்சேரியில் ஹயாத்துன் நிஷா என்ற பெண்ணை கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூரமாகக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டிய மாணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி ஆகியோரை ஒடிசாவில் கைது செய்த போலீசார், தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை புறநகர் கூடுவாஞ்சேரியில் ஹயாத்துன் நிஷா என்ற பெண்ணை கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டிய மாணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி ஆகியோரை ஒடிசாவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

கூடுவாஞ்சேரி தம்பதி
தாம்பரம் கூடுவாஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனில் 12 மணி நேரத்திற்கும் மேலாக இந்த தம்பதியிடம் விசாரணை நடத்தப்பட்டது.. சினிமாவை மிஞ்சும் வகையில் அவர்கள் அரங்கேற்றிய இந்த கொலைக்கான திடுக்கிடும் பின்னணி குறித்த அதிர்ச்சித் தகவல்கள் காவல்துறை விசாரணையில் இப்போது வெளியாகியுள்ளன. தம்பதி அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் சொன்னதாவது:
கொலை செய்யப்பட்ட ஹயாத்துன் நிஷா, ஒடிசாவை சேர்ந்தவர். அங்கேயே திருமணமாகி கணவருடன் வசித்து வந்துள்ளார்.. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.. தம்பதி 2 பேரிடமும் குழந்தையுடன் 10 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்துள்ளனர்.. ஆனால், கருத்து வேறுபாடால் கணவரை பிரிந்து மகனுடன் வசித்து வந்துள்ளார்..
நிஷாவின் கள்ளக்காதல்
பிறகு மாடம்பாக்கத்தில் தங்கி, தாம்பரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடனும் கருத்து வேறுபாடால் பிரிந்தார்.. இதற்கு பிறகுதான், தன்னுடன் பணிபுரிந்த மாணிக் உத்தீன் லஸ்கர், அவரது மனைவி பகாபதி மாஜி, ஆகியோருடன், 4 மாதங்களுக்கு முன்பு பழக்கமாகி உள்ளார்.. அப்போது நிஷாவிற்கும், மாணிக் உத்தீனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அதுவே கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.
இந்த உறவு, பகாபதி மாஜிக்கு தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.. உறவை முறித்து கொள்ளும்படி தகராறு செய்துள்ளார்.. ஆனால் ஒருகட்டத்தில் கணவரின் கள்ளக்காதலுக்கு சம்மதித்தார்.. இதற்கு பிறகு, 3 பேரும், கூடுவாஞ்சேரியில், கடந்த ஜூன் மாதம் வாடகைக்கு குடியேறியிருக்கிறார்கள்.. ஆனால், தன்னுடைய தாயின் நடவடிக்கைகளை கண்டு வெறுப்பான நிஷாவின் மகன், அந்த வீட்டை வீட்டே கிளம்பி சென்றுவிட்டார்..
சென்னையில் கொலை திட்டம்
இந்நிலையில் நிஷா, 2 மாத கர்ப்பமானார்.. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, மாணிக் உத்தீனிடம் வற்புறுத்த துவங்கியுள்ளார்.. ஆனால், கர்ப்பத்தை கலைக்கும்படி தம்பதி 2 பேரும் சொல்லி உள்ளனர்.. இதனால் 3 பேருக்கும் தகராறு வெடித்துள்ளது.. இதில் ஆத்திரமடைந்த நிஷா, தம்பதி இருவர் மீதும் போலீசில் புகார் அளிப்பதாக கூறியிருக்கிறார்.
அப்போதுதான், தம்பதி இருவரும் சேர்ந்து நிஷாவை கொன்றுவிடுவதென முடிவு செய்துள்ளனர்.. ஆகஸ்ட் 2ம் தேதி விஷம் கலந்த சாப்பாட்டை, ஹயாதுன் நிஷாவுக்கு சாப்பிட தந்துள்ளார்.. பிறகு போலீசில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, சடலத்தை எப்படி அழிக்கலாம் என கூகுளில் தேடியிருக்கிறார்கள். அதற்கு பிறகுதான், சடலத்தை பாத்ரூமில் வைத்து பல துண்டுகளாக மாணிக் உத்தீன் வெட்டியுள்ளார்.
வெட்டப்பட்ட உடல் பாகங்களை டிராலி பெட்டியில் வைத்து, இழுத்து செல்ல முயன்றுள்ளனர்.. ஆனால், அதிகமாக எடை காரணமாக டிராலியை இழுக்க முடியவில்லையாம். அதனால் வெட்டப்பட்ட தலையை மொட்டையடித்து, கண், காது, மூக்கு போன்ற உறுப்புகளை தனித்தனியாக எடுத்துள்ளனர்..
உறுப்புகளை வெட்டி, 14 லிட்டர் வினிகர்
உடலின் சதை பகுதிகளை கத்தியால் தனியாக உரித்து எடுத்து, அதை பிரியாணி பாத்திரத்தில் போட்டுள்ளனர்.. அந்த சதை பகுதியை மாவு பதத்திற்கு கொண்டு வர, பிரியாணி பாத்திரத்தில் 14 லிட்டர் வினிகர், மற்றும் வேறு சில கெமிக்கல்களையும் கலந்துள்ளனர்.. பாத்திரத்துக்குள் காற்று போகாமல் இருக்க, மைதா மாவு கலவையால் அதை பூசி மூடியிருக்கிறார்கள்..
பிறகு எலும்புகளை மட்டும் துண்டாக்கி தனித்தனி பிளாஸ்டிக் பைகளில் பொட்டு, டிராலி பெட்டியில் வைத்துள்ளனர்.. இத்தனையையும் செய்து முடிக்க, ஒரு நாள் முழுக்க ஆகிவிட்டது.. பிறகு மறுநாள் 3ம் தேதி மாலை, டிராலி பெட்டியை கூடுவாஞ்சேரியிலிருந்து புறநகர் ரயிலில் ஏற்றி, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேனுக்கு கொண்டு சென்று, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வைத்துவிட்டு, கூடுவாஞ்சேரி வீட்டுக்கு வந்துவிட்டனர்.
ஆகஸ்ட் 4ம் தேதி, பல்லாவரத்தில் ஒரு வீட்டில் தங்கியிருநது, ஆன்லைனில் ஃபிளைட் டிக்கெட் புக் செய்து, 6ம் தேதி அசாம் தப்பியிருக்கிறார்கள்" இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.. இன்னமும் தம்பதியிடம் விசாரணை நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
