கூடுவாஞ்சேரி நிஷா! விஷம் தந்து கொன்றதுமே இப்படியா நடந்தது? சென்னை சென்ட்ரலில் நடித்து காட்டிய தம்பதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கூடுவாஞ்சேரியை உலுக்கிய ஹயாத்துன் நிஷா படுகொலை வழக்கில், போலீசாரின் அதிரடி விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஒடிசாவில் கைது செய்யப்பட்ட மாணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி ஆகியோரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த கொலை செயலின் ஒவ்வொரு விசாரணையும் வெளியாகி மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நிஷாவுக்கும் மாணிக் உத்தீனுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில், தான் 2 மாத கர்ப்பமாக இருப்பதாக நிஷா சொன்னதோடு, தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு மாணிக் உத்தீனை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

Guduvancheri Murder Case Nisha Murder Case Chennai Central Crime

சென்னை கூடுவாஞ்சேரி

இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தின் உச்சக்கட்டமாக, கடந்த ஆகஸ்ட் 2ம் தேதியன்று நிஷாவிற்கு விஷம் கலந்த உணவைக் கொடுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர் மாணிக் உத்தீன் லஸ்கர் (22) மற்றும் அவரது மனைவி பகாமதி மாஜி (20)..

கொலை செய்ததோடு நில்லாமல், அந்தச் சடலத்தை எப்படி அப்புறப்படுத்துவது என்று கூகுளில் தேடியுள்ளனர். சடலத்தை உடனடியாக அப்புறப்படுத்த முடியாததால், அந்த உடலை சிதைத்து பல துண்டுகளாக வெட்டியுள்ளனர். சதைப்பகுதிகளைப் பிரித்து பிரியாணி பாத்திரத்தில் வைத்து, 14 லிட்டர் வினிகர் உள்ளிட்ட பல்வேறு கெமிக்கலை பயன்படுத்தி அழுகாமல் பார்த்துக் கொள்ள முயன்றுள்ளனர்.

உடல் பாகங்கள்

அதுமட்டுமல்லாமல், உடல் பாகங்கள் விரைவாக அழுகி நாற்றம் வீசாமல் இருப்பதற்காக யூடியூப் வீடியோக்களை பார்த்து வினிகரை தெளித்து மூடி வைத்ததாகவும் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, எலும்புகளை தனித்தனி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து டிராலி பெட்டியில் திணித்துள்ளனர். ஆனால் அதிக எடை காரணமாக அந்தப் பெட்டியைத் தாங்கிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும், ஆகஸ்ட் 3ம் தேதியன்று கூடுவாஞ்சேரியிலிருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரலுக்கு சென்று, அங்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிவறை அருகே அந்த டிராலி பெட்டியை ஓரமாக வைத்துவிட்டுத் திரும்பியுள்ளனர். இவ்வளவையும் கைதான தம்பதியினர் வாக்குமூலமாக தந்துள்ளனர்.

தத்ரூபமாக நடித்து காட்டிய தம்பதி

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள தம்பதியினரை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த கூடுவாஞ்சேரி வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்றபோது, நிஷாவை எவ்வாறு கொலை செய்தனர் என்பதை 2 பேருமே நடித்துக் காட்டியிருக்கிறார்கள்.

மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 2 கத்திகள் மற்றும் ஒரு கத்திரிக்கோலையும் போலீசார் அங்கிருந்து பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தம்பதியினர், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸை எங்கு வைத்தார்கள்? எப்படி வைத்தார்கள் என்பதை நேரில் நடித்துக் காட்டினார்கள்..

ஜெயிலில் தம்பதி

தொடர்ந்து அங்கிருந்து பார்க் ரயில்வே ஸ்டேஷன் வந்து, அங்கிருந்து ரயிலில் ஏறி சென்றதையும் போலீசரிடம் விளக்கினார்கள். இதனைத் தொடர்ந்து, லாங் டிஸ்டன்ஸ் பஸ் மற்றும் ரயில் மூலமாக பாதுகாப்புடன் 2 குற்றவாளிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்..

வழக்கை விசாரித்த நீதிபதி, செப்டம்பர் 16-ம் தேதி வரை அவர்களைச் சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2 பேரும் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.. இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+