ஜனநாயகனுக்கு எதிரான புகார் சென்னையில் இருந்துதான் வந்துச்சு.. யார் தெரியுமா? போட்டு உடைத்த கஸ்தூரி
சென்னை: விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு எதிராக சென்னையில் இருந்துதான் புகார் வந்தது என்று நடிகையும், பாஜக பிரமுகருமான கஸ்தூரி கூறியுள்ளார். மேலும் கங்கணா ரணாவத்தின் எமர்ஜென்சி படம் செப் 2024க்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் அந்த படம் ஜனவரியில் தான் ரிலீஸ் ஆனது. இத்தனைக்கும் பெரிய தயாரிப்பு குழுமம் தயாரித்த படம் அது என்றும் அவர் கூறினார்.
பாஜக பிரமுகரும் நடிகையுமான கஸ்தூரி சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது ஜனநாயகன் படப் பிரச்சினை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக கஸ்தூரி அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:-

ஜனநாயகனுக்கு புகார் சென்னையில் இருந்தே வந்தது
எந்த ஒரு பிரிவினையும் பேசக்கூடிய பிரச்சாரமாக இருந்தாலும், வெறுப்பை விதைக்கக்கூடிய பிரச்சாரமாக இருந்தாலும் சென்சார் போர்டில் கண்டிப்பாக கேள்விகள் எழுப்புவார்கள். இரண்டு பிரிவுகளுக்கு இடையே ரைட்ஸ் பிரச்சினை வரும் என்றாலும் யோசிப்பார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் 'எமர்ஜென்சி' என்ற ஒரு படம்.
அந்த படம் எடுத்தது யாரு என்றால் இன்றைய எம்பி கங்கனா ரணாவத். அவருடைய படத்திற்கு ஏகப்பட்ட கட் கொடுத்தார்கள். செப் 2024க்கு திட்டமிட்டவர்கள் ஜனவரியில் தான் ரிலீஸ் ஆனது. இத்தனைக்கும் பெரிய தயாரிப்பு குழுமம் தயாரித்த படம் அது. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் அந்த படம் வெளியே வந்தது. சென்சார் போர்டு பாஜகவின் கைப்பாவை என்ற பிரச்சாரத்தைதான் முதலில் முறியடிக்க வேண்டும்.
அவர்கள் யார் சொல்லியும் கேட்க மாட்டார்கள். அப்படி எல்லாம் ஆளும் கட்சி பேச்சை கேட்பதாக இருந்தால் பல படங்கள் வெளியே வந்து இருக்காது. ஜனநாயகனுக்கு புகார் தமிழ்நாட்டிலிருந்து சென்னையில் இருந்து தான் வந்தது என்ற விஷயம் வெளியே வந்துவிட்டது. யார் புகார் கொடுத்தார்கள் என்று நீங்களே முடிவு பண்ணிக்கோங்க," என்றார்.
டெல்லியில் பராசக்தி பொங்கல் விழா
'பராசக்தி' படக்குழு டெல்லியில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த கஸ்தூரி, "பொங்கல் கொண்டாடுகிறார்கள். அந்த விஷயத்தில் அரசியல் இருக்கிறதா என்றால் அரசியல் இருக்கிறது. சினிமா என்பதில் ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள்.
ஒரு வகையில் திமுக சார்ந்தவர்களை நாம் பாராட்டுகிறோம். அவர்கள் அரசியல் வேறு, சினிமா வேறு என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். சினிமாவுக்கு வந்து எந்த விதமான, எந்த இடத்திலிருந்து கட்சி ரீதியாக, அரசியல் ரீதியாக பிரச்சினை வரவில்லை என்றாலும் கூட, ஏதாவது ஒரு செக்ஷனில் வருத்தப்பட்டு விடுவார்களோ என்று டெல்லியில் ஒரு குத்து, சென்னையில் ஒரு குத்து. அதை தவறு எல்லாம் சொல்லவில்லை.
ஜனநாயகன் பட தீர்ப்பு எப்போது?
சினிமா என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அப்படித்தான் இருக்க வேண்டும். கலை என்பது இணைக்கக்கூடிய ஒரு விஷயம்" என்றார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்திற்கு எதிராக புகார் வந்ததால், படத்தை மறுதணிக்கைக்கு அனுப்ப சென்சார் போர்டு முடிவு செய்தது.
இதனை எதிர்த்து ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 27 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications