கிறுகிறு கிண்டி.. குண்டு வீசிய ரவுடி வினோத் புழலில் அடைப்பு..சென்னையில் ஃபுல்போர்ஸில் இறங்கிய போலீஸ்
சென்னை: ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தையடுத்து, கிண்டி உள்ளிட்ட சென்னையின் பிரதான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..
அதேபோல, பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை நவம்பர் 9ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, வினோத் இன்று காலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்று நடந்தது என்ன: நேற்று மாலை திடீரென ஆளுநர் மாளிகை அருகே, பெட்ரோல் குண்டு ஒன்று வெடித்து சிதறியது... ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு மர்மநபர் ஒருவர் போனார்.
உடனே கண்காணிப்பு பணியிலிருந்த போலீசார் அந்த நபரை விரட்டி பிடித்து கைது செய்தனர். அவரிடம் மேலும் 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன விசாரணையில் அவர் தேனாம்பேட்டையை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பதும், இவர் ஏற்கனவே கடந்த வருடம் சென்னை தி.நகர் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் என்பதும் தெரியவந்தது.
கண்காணிப்பு பணிகள்: அந்த வழக்கில் கைதாகி, 2 நாளைக்கு முன்புதான், இவர் ஜெயிலிலிருந்து வெளியே வந்தாராம்.. இப்போது ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசியிருக்கிறார். கமலாலயம் மீது அன்று குண்டு வீச சொன்னதே அண்ணாமலை தான் என வினோத் அப்போது வாக்குமூலம் அளித்திருந்ததுடன், அண்ணாமலைக்கும் தனக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவை போலீசாரிடம் வினோத் ஒப்படைத்திருந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும், நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றிட வேண்டும் என்று வினோத் தற்போதும் வாக்குமூலம் தந்துள்ளதாக தெரிகிறது..
இதனிடையே, சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தந்திருந்தார். ஆனால் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசவில்லை. சர்தார் பட்டேல் சாலையில்தான் வீசினார். ஆளுநர் மாளிகைக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீதுதான் பெட்ரோல் குண்டு விழுந்தது. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மதுபோதை: ரவுடி கருக்கா வினோத் மீது 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.. பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மதுபோதையில் இருந்துள்ளார். பெட்ரோல் நிரப்பிய 4 பாட்டில்களில் ஒரு பாட்டிலை மட்டுமே வீசியுள்ளார் கருக்கா வினோத். கருக்கா வினோத்திடம் இருந்து பெட்ரோல் நிரப்பிய மேலும் 3 பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளோம். ஆளுநர் மாளிகை வாயிலுக்கு முன் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், உடனடியாக கருக்கா வினோத்தை சுற்றி வளைத்தனர்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி பாதுகாப்புப் பணியில் எந்தக் குறையாடும் இல்லை. பெட்ரோல் குண்டு வீச முயன்றதன் நோக்கம் என்ன என்பது பற்றி, விசாரணைக்குப் பிறகே தெரியவரும்" என்றார்.
ஆளுநர் மாளிகை: அதேபோல, ஆளுநர் மாளிகையும் விளக்கம் தந்துள்ளது.. அதில், அக்டோபர் 25ம் தேதி, பிற்பகல் கிண்டியில் உள்ள ராஜ்பவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய மர்ம நபர்கள் பிரதான வாயில் வழியாக ஆளுநர் மாளிகைக்கு உள்ளே நுழைய முயன்றனர். ஆனால் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், ராஜ்பவனில் 2 பெட்ரோல் குண்டுகளைவீசி தாக்குதல் நடத்திவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புழல் சிறை: இதையடுத்து, கிண்டி ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசிய, ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்த போலீசார், சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.. பிறகு, நவம்பர் 9ம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நீதிமன்ற உத்தரவை அடுத்து ரவுடி கருக்கா வினோத் இன்று காலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது, கிண்டி பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. ஆளுநர் மாளிகை முன்பு கூடுதல் தடுப்பு வேலிகளை அமைத்து போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் சென்னை வரும், ஜனாதிபதி திரெளபதி முர்மு ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்க போவதாகவும் தெரிகிறது.
முழு பாதுகாப்பு: எனவே, சென்னை விமான நிலையம், அதன் வளாகப்பகுதி முழுவதும் நேற்று காலை முதலே கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் நாளை மாலை வரை இருக்கும் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, டிஜிபி அலுவலகம் வெளியிட்டிருந்த செய்தியில், "ஜனாதிபதியின் சென்னை வருகையில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை, கவர்னர் மாளிகையில் தங்கி பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்வார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications