அண்ணாமலை எதிர்த்த அதே லூலூ மால்.. குஜராத்திலும் பிரம்மாண்டமாக வருது.. முதலீட்டாளர் மாநாட்டில் முடிவு
சென்னை: தமிழ்நாட்டில் சமீபத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது போலவே குஜராத்திலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் லுலு குழுமம் அகமதாபாத்தில் 4,000 கோடி முதலீட்டில் இந்தியாவின் மிகப்பெரிய வணிக வளாகத்தை உருவாக்க உள்ளது. அதாவது மிகப்பெரிய மால் ஒன்றை அமைக்க உள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே இந்த மால் அமைய உள்ள நிலையில் குஜராத்திலும் இதே மால் அமைய உள்ளது. தமிழ்நாட்டில் இந்த மால் அமைவதை பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்த்த நிலையில் குஜராத்திலும் இதே மால் அமைய உள்ளது. தமிழ்நாட்டில் லூலூ மாலின் ஒரு செங்கல்லைக் கூட வைக்க பாஜக அனுமதிக்காது என்று கூறிய நிலையில் அந்த மால் தமிழ்நாடு மட்டுமின்றி குஜராத்திலும் அமைய உள்ளது.
கடந்த 2022ம் வருடம் முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் சென்றார். துபாயில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்புகளை மேற்கொண்டார். துபாயில் நடந்த உலக அளவிலான எக்ஸ்போவில் தமிழ்நாட்டின் அரங்கை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது . தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு முதலீடுகள் இந்த பயணத்தின் போது ஈர்க்கப்பட்டது.
ஒப்பந்தம்: இந்த பயணத்தின் ஒரு கட்டமாக லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் உணவு பதனிடும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. கிட்டத்தட்ட 3000 ஆயிரம் பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் இரண்டு மால்களை அமைக்கவும் லூலூ நிறுவனம் முடிவு செய்ததாக கூறப்பட்டது.
லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைவர் யூசுப் அலி முஸ்லிமான வீட்டில் அப்துல் காதருடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் சந்திப்பு நடத்தினார். இதை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கேரளா மற்றும் பெங்களூரில் மட்டுமே அதிகமாக கவனம் செலுத்தி வந்த அந்த நிறுவனம் தமிழ்நாடு பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளது. இவர்கள் ஏற்கனவே கேரளா, பெங்களூரில் மால்களை வைத்து உள்ளனர்.
எங்கே வருகிறது: தமிழ்நாட்டில் லுலு குழுமம், ஷாப்பிங் மால்கள், ஹைப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்றவற்றை அமைக்க ரூ.3,500 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளன.
அடுத்த வருடம் இவர்களின் மால் சென்னையில் திறக்கப்பட உள்ளது. அதே சமயம் ஹைப்பர் மால் கோவையில் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது.
லுலு குழுமம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உணவு பதப்படுத்துதல் மற்றும் தளவாட மையத்தையும் தமிழ்நாட்டில் அமைக்கும். நிறுவனத்தில் இருந்து உயர்மட்டக் குழு விரைவில் மாநிலத்திற்கு வருகை தந்து, இடங்கள் மற்றும் தொடர்புடைய ஆலோசனைகளை மேற்கொண்டு முதலீடு செய்யப்படும் இடத்தை இறுதி செய்யும்.
எங்கே மால் வருகிறது?: இந்த நிலையில்தான் பாஷ்யம் குழுமத்துடன் இணைந்து ECR இல் லூலூ மால் அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அங்கே இருக்கும் பிரார்த்தனா தியேட்டர் சமீபத்தில் பாஷ்யம் மூலம் வாங்கப்பட்டது.. அந்த திறந்தவெளி தியேட்டர் இடிக்கப்பட்டது. ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில், மகாபலிபுரம் செல்லும் வழியில், 29 ஏக்கர் நிலம், பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு, இடிக்கும் பணி ஏற்கனவே துவங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ₹550 கோடிக்கு மேல் என்று ரியல் எஸ்டேட் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இங்குதான் அந்த மால் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இங்கே மிகப்பெரிய குடியிருப்பும் அமைக்கப்பட உள்ளது. அதன் அருகிலேயே லூலு மால் அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications