துக்ளக்குக்கு வந்த "சிக்கல்"?.. ஆர்எஸ்எஸ் + பாஜக.. "எப்ப பார்த்தாலும் முஸ்லிம்கள்".. தடா ரஹீம் சுரீர்
ஆடிட்டர் குருமூர்த்தியிடம் துக்ளக் பெயரை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சென்னை: பல வருட காலமாக வெளிவந்து கொண்டிருக்கும், துக்ளக் பத்திரிகை பெயரை உடனே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வெடித்துள்ளது.. இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல், சினிமா, நாடகம், வழக்கறிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், என ஒரே துறையில் உச்சம் தொட்ட பன்முக திறமைசாலிதான் நடிகர் சோ.. 70களில் துக்ளக் என்ற பத்திரிகையை தொடங்கினார்.
அரசியல் விமர்சனத்தையே மையமாக கொண்டு வெளியான பத்திரிகைதான் துக்ளக்.. ஆனாலும் அந்த சமயத்தில் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.. எனினும், மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று அந்த சமயத்தில் அரசியல் களத்தில் எழுந்தது.

ராமர் படம்
திராவிடர் கழக ஊர்வலம் ஒன்றில் ராமர் படம் தாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது... அந்த சம்பவம் பற்றிய செய்தியைப் போட்டோக்களுடன் வெளியிட்டது துக்ளக் பத்திரிகை.. அந்த பத்திரிகைப் பிரதிகளை திமுக அரசு பறிமுதல் செய்ததாக, பெரிய அளவில் செய்தியானது... அப்போதுதான் துக்ளக் பத்திரிகை பிரபலமானது.. 'கருணாநிதி அரசு துக்ளக் பத்திரிகையை பறிமுதல் செய்திருக்காவிட்டால், எனக்கு அகில இந்திய ரீதியில் ஒரு அங்கீகாரமே கிடைத்திருக்காது' என்று ஒருமுறை சோ வெளிப்படையாக கூறியிருந்தார்.

சோ கிண்டல்
அதற்கு பிறகு, திமுகவின் கொள்கை நிலைப்பாடுகள், பிரசார முறைகளை கிண்டல் கேலி செய்தும், துணிச்சலான அட்டைப்படங்களை வெளியிட்டும் தமிழக மக்களுக்கு நெருக்கமானது துக்ளக் பத்திரிகை.. சோவுக்கு பிறகு, ஆடிட்டர் குருமூர்த்தியை ஆசிரியராக பத்திரிகை வெளிவந்து கொண்டிருக்கிறது.. இத்தனை காலமும் சோ இருந்தபோது, வெடிக்காத பிரச்சனை ஒன்று, தற்போது வெடித்துள்ளது.. துக்ளக் பத்திரிகை பெயரை உடனே மாற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தடா ரஹீம்
இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தடா ரஹீம் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது துக்ளக் என்பது முகலாய மன்னர்கள் வம்சத்தின் பெயர்கள் ஆகும், உதரணமாக 1)முகமது பின் துக்ளக் 1325-1351 2)பெரோஷா துக்ளக் 1351-1388 3)கியாசுதீன் துக்ளக் ஷா 1388-1389 4)அபுபக்கர் ஷா துக்ளக் 1389-1390 5)முகமது ஷா துக்ளக் 1390-1394 6)அலாவூதீன் சிக்கந்தர் ஷா 1394 7)சுல்தான் நசீர் உத்தீன் மகமது ஷா துக்ளக் 1394-1412/1413 8)சுல்தான் உத்தீன் நுஸ்ரத் ஷா, 1394-1398 தில்லி 9)நசீர் உத்தீன் ஷா துக்ளக் 1394-1398 10)பெரோஷாபாத் துக்ளக் சுல்தானகத்தின், கிழக்கில் பெரோஷாபாத் மற்றும் தில்லியை தலைநகராகக் கொண்டு இரண்டு துக்ளக் சுல்தான்கள் ஆட்சி செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடிட்டர் குருமூர்த்தி கட்டுரை
தொடர்ந்து முஸ்லிம்களை குறிவைத்து துக்ளக் இதழில் கட்டுரைகள் வருகின்ற உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் கொரோனா நோயை பரப்பியது தப்லீக் ஜமாஅத் அமைப்பினர் என ஆடிட்டர் குருமூர்த்தி கட்டுரை எழுதி இருக்கிறார்... ஆர்எஸ்எஸ் பாஜக சனாதன கொள்கைகளை தனது துக்ளக் இதழில் கட்டுரைகளாகவும் துணுக்கு செய்தியாகவும் வெளியிட்டு வருவதுடன் தொடர்ந்து முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரமும் செய்து வருகிறார்.

துக்ளக் பெயர்
இஸ்லாமிய மன்னர்களின் பெயரை பயன்படுத்தி வெளிவரும் துக்ளக் இதழ் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படுவதை பார்த்தால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை திசை திருப்புகிறார் என்பது புலப்படுகிறது. ஆகவே துக்ளக் என்கிற பெயரை உடனே மாற்ற வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications