குரு பெயர்ச்சி பலன் 2021: கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குருவால் என்னென்ன மாற்றங்கள் ?
குருபகவான் மகரம் ராசியிலிருந்து கும்பம் ராசிக்குள் இன்று மாலை 6 மணி 10 நிமிடத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார்.
சென்னை: வாக்கியப்பஞ்சாங்கப்படி இன்று குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. மகர ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் கும்ப ராசிக்கு மாலை 6 மணிக்கு மேல் இடப்பெயர்ச்சியாகிறார். குருபகவான் கும்ப ராசியில் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்வார். திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் கார்த்திகை மாதம் 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதியன்று சனிக்கிழமையன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். இந்த குரு பெயர்சியால் நாட்டில் என்ன மாற்றம் நிகழும் பொருளாதாரம் உயருமா பொது பலன்களைப் பார்க்கலாம்.
மகர ராசியில் சனிபகவானுடன் இணைந்து சஞ்சரித்த குருபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவதால் நாட்டில் பொருளாதாரம் மேன்மையடையும் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. கும்பராசி குரு வளைய வீடு. ஸ்திர வீடு இந்த வீட்டில் குரு பயணம் செய்வதால் மக்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
மக்களின் மனதில் புதிய தன்னம்பிக்கை அதிகரிக்கும். கும்பத்தில் குரு அமர்வதால் நீர் நிலைகள் நிரம்பி வழியும். உணவு உற்பத்தி அதிகரிக்கும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
பங்குச்சந்தையில் புதிய ஏற்றம் ஏற்படும். தங்கம் விலை உயரும் தங்கத்தின் பயன்பாடும் அதிகரிக்கும். அரசு நிறுவனங்கள் பல தனியார் மயமாகும்.

சுற்றுலாத்துறை வளர்ச்சி
நாட்டில் மக்களை அச்சுறுத்தி வரும் நோய் பயம் விலகும். நோய் பயத்தால் வீட்டிற்குள் முடங்கியிருந்த மக்கள் இனி சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர ஆரம்பிப்பார்கள் முடங்கிக் கிடந்த சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும். சுரங்கத்துறை வளர்ச்சியடையும், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யும். புதிய சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

கல்வித்துறை வளர்ச்சி
குருபகவான் கும்ப ராசியில் இருந்து மிதுனம், சிம்மம், துலாம் ராசிகளை பார்வையிடுகிறார். புதன்பகவான் ஆதிக்கம் நிறைந்த மிதுன ராசியின் மீது குருவின் பார்வை விழுவதால் மாணவர்களின் கல்வியில் புதிய மாற்றம் ஏற்படும். கல்வித்துறை வளர்ச்சியடையும். மாணவர்களின் மன உளைச்சல் நீங்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பள்ளி கல்லூரிகள் முழு வீச்சில் செயல்படும்.

அரசியல்வாதிகள் வளர்ச்சி
சிம்ம ராசியின் மீது குருவின் பார்வை விழுவதால் அரசியல்வாதிகளின் கை ஓங்கும். ஆட்சியாளர்களின் திறமை அதிகரிக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியடையும் அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை இந்தியா எளிதில் சமாளிக்கும்.

தொழில் வளர்ச்சி
சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த துலாம் ராசியை குருபகவான் பார்வையிடுவதால் கலைத்துறை வளர்ச்சியடையும். மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சியடையும். ரியல்எஸ்டேட் துறை வேகமெடுக்கும். நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இன்டர்நெட் சேவைகள் பெருகும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

பலனடையும் ராசிக்காரர்கள்
இந்த குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் ராசிக்காரர்கள் அதிக பலனை அடையப்போகின்றனர். திருமணம் சுபகாரியம் நடைபெறும், புத்திரபாக்கியம் கிடைக்கும். புதிய வேலையும் வேலையில் புரமோசனும் கிடைக்கும். வீடு மனை வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். குரு பலன் வந்துள்ளதால் இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கை கூடி வந்துள்ளது.

பாதிப்பு யாருக்கு
இந்த குரு பெயர்ச்சியால் ரிஷபம்,கடகம்,கன்னி விருச்சிகம்,தனுசு,கும்பம், மீனம் மற்றும் குரு தசை குரு புக்தி நடப்பவர்கள் பரிகாரம் செய்யலாம்.குருவின் சஞ்சாரம் சாதகமாக இல்லாத காரணத்தால் பண விசயத்தில் கவனமாக இருக்கவேண்டும். சுப காரிய முயற்சிகளில் கவனமும் நிதானமும் தேவை. வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது அவசியம்.

குரு பகவானுக்கு பரிகார யாகங்கள்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குரு பெயர்ச்சி மஹா யாகம் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 5.00 மணிக்கு மகா கணபதி யாகம். நவக்கிரக யாகம் குருக்கிரக சாந்தி யாகம், மஹா லக்ஷ்மி யாகம், தட்சிணாமூர்த்தி யாகம். கோ பூஜை போன்ற யாக பூஜைகள் இரவு 7.00 மணி வரை நடை பெறுகிறது. பரிகாரம் செய்யும் ராசிக்கரார்களுக்கு யாகத்தில் வைத்து பூஜித்த குரு பகவான் யந்திரம், ரக்ஷை மற்றும் அட்சதை பிரசாதம் வழங்கப்படும். இதேபோல தென்காசி மாவட்டம் சாம்ராஜ்ய லட்சுமி நரசிம்ம பீடத்தில் பிற்பகல் 2.45 மணி முதல் சிறப்பு யாகங்களும் பரிகார பூஜைகளும் நடைபெற உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications