குருமூர்த்தி என்ன சொல்ல போறாரோ? அமித்ஷா வரும்முன் அண்ணாமலை ஏன் அங்கே போனார்? அடுத்த பாஜக தலைவர் இவரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணிக்காக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அந்த பதவியில் இருந்து மாற்றப்படுகிறார் என்றும், அவருக்கு பதிலாக புதிய தலைவரை பாஜக தேசிய தலைமை தேர்வு செய்து வருவதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன.. இந்த பரபரப்புக்கு நடுவில், தமிழகம் வந்திருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. இன்று முக்கிய நிர்வாகிகளையும் அவர் சந்தித்து பேச உள்ளார்.. இதனால், தமிழக பாஜகவில் மிகப்பெரிய பரபரப்பு நிலவி வருகிறது.

தமிழக சட்டசபைக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார்.

Gurumurthy Amit shah Annamalai

பாஜக அண்ணாமலை

அப்போது எடப்பாடி பழனிசாமி, "'அண்ணாமலையை வைத்துக்கொண்டு கூட்டணி சாத்தியமாகாது.. அவர் தலைவராக இருந்தால், அதிமுகவின் தொண்டர்கள் பாஜகவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இல்லை என்று சொன்னாராம். அதற்கு அமித்ஷா, "அண்ணாமலை விவகாரத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று பதிலளித்தாராம்.

இதைத்தொடர்ந்து அண்ணாமலையும் டெல்லிக்கு சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்துள்ளார்.. பிறகு அமித்ஷாவையும் சந்தித்து பேசியிருக்கிறார்.. அப்போது அமித்ஷா, "திமுக ஆட்சியை விரட்டியடிக்கும் அளவுக்கு கூட்டணி தேவை. அதனால், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றாலும் ஒத்துழைப்பு வேண்டும் என்று கோபமாக சொன்னாராம். அதற்கு அண்ணாமலை, நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு ஒரு தொண்டனாக பணியாற்ற தயார் என்று சொன்னாராம்.

புதிய தலைவர் யார்

எனினும், அண்ணாமலை விரைவில் மாற்றப்படக்கூடும் என்கிற தகவல் கசிந்தது.. தமிழகத்தின் புதிய பாஜக தலைவருக்கான போட்டியில் அண்ணாமலை தான் இல்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருந்தார்.. இந்த தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் என பல சீனியர்கள் துண்டு விரித்துள்ளதாக தெரிகிறது.

இதில் நயினாருக்கு நிறைய சான்ஸ் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், 10 வருடம் கட்சியில் இருந்தால்தான் போட்டியிட முடியும் என்ற விதிமுறை வந்துள்ளது.. ஆனால், நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்து 8 ஆண்டுகளே ஆகின்றன. எனவே, வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாய்ப்பு இருக்கலாம் என தெரிகிறது.

தென்காசி புளியங்குடி ஆனந்தன்

அதேபோல, தென்காசி புளியங்குடியை சேர்ந்த ஆனந்தன் அய்யாசாமி என்பவருக்கு அதிக வாய்ப்பு இருக்கலாம் என்றார்கள்.. அதுவும் சந்தேகம்தானாம்.. இவர் தென்காசி மாவட்டம் புளியங்குடி ஊரை சேர்ந்த தொழிலதிபர் ஆவார்.. தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்..

இப்படிப்பட்ட சூழலில்தான் தற்போது அமித்ஷா சென்னை வந்துள்ளார்.. ஆனால், மாநில தலைவர் தேர்தலுக்கும், அமித்ஷா வருகைக்கும் சம்பந்தமில்லை என்றும், அவர் வருவது கட்சியின் தலைவர்களை சந்திப்பதற்காகவே என்றும் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தாலும், புதிய தலைமை குறித்தும் இன்று பேசப்படும் என தெரிகிறது.

பாஜக ஆதரவாளர்

அந்தவகையில் மூத்த பாஜக ஆதரவாளர் குருமூர்த்தியையும், இன்று அமித் ஷாவை சந்தித்து பேசப்போகிறாராம்.. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தலாம் என்கிறார்கள். தமிழக அரசியலில் முக்கிய அரசியல் பிரபலமாக உள்ள குருமூர்த்தி அதிமுக மற்றும் பாஜகவுக்கு நெருக்கமான நபராக பார்க்கப்படுவதால், அமித்ஷாவுடனான இன்றைய சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

ஆடிட்டர் குருமூர்த்தி

ஆனால், ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா சந்திக்கும் முன்பே, நேற்று குருமூர்த்தியை சந்தித்து பேசினார் அண்ணாமலை.. சென்னை மயிலாப்பூரில் உள்ள குருமூர்த்தி வீட்டிற்கு சென்ற அண்ணாமலை, சுமார் 1 மணி நேரம் பேச்சு நடத்தியிருக்கிறார்..

இதனிடையே, பாஜக மாநில தலைவர் பதவிக்கான விருப்ப மனு வழங்கலாம் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், இன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனுக்களை மாநில தலைமை அலுவலகத்தில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தமிழக பாஜக வட்டாரமே பரபரத்து காணப்படுகிறது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+