குருமூர்த்தியின் பேச்சு திமிர்வாதத்தின் உச்சம்.. ஆணவத்தின் உச்சம்.. ஜெயக்குமார்
Recommended Video
சென்னை: குருமூர்த்தியின் பேச்சு திமிர்வாதத்தின் உச்சம் என்றும் ஆணவத்தின் உச்சம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-இல் ஜெயலலிதா மறைந்தவுடன் முதல்வராக ஓபிஎஸ் பொறுப்பேற்றார். இதையடுத்து 2017- ஆம் ஆண்டு தொடக்கத்தில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்ததுடன் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தத்தை நடத்தினார்.
இதற்காக மறைந்த ஜெயலலிதாவின் சமாதியில் அவர் தியானம் இருந்தார். மேலும் தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக பரபரப்பு பேட்டியையும் அளித்தார். இதையடுத்து அதிமுக இரண்டாக பிரிந்தது. அதில் ஒன்று ஓபிஎஸ் தலைமையிலும் மற்றொன்று சசிகலா தலைமையிலும் இயங்கியது.

துணை முதல்வர்
பின்னர் சசிகலா சிறை சென்றது, அதிமுக ஒன்றிணைய வேண்டுமானால் சசிகலா, தினகரனை ஒதுக்கி வைப்பது என ஓபிஎஸ் நிர்பந்தித்தது, பின்னர் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து ஓபிஎஸ் துணை முதல்வரானது உள்பட அனைத்தும் அறிந்த ஒன்றுதான்.

துணை முதல்வர் ஓபிஎஸ்
இந்த நிலையில் தற்போது துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தற்போது ஒரு பெரும் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் நான் கூறியதாலேயே ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் அப்போது தியானம் மேற்கொண்டார்.

ஆணவத்தின் உச்சம்
ஓபிஎஸ் தியானம் செய்ததன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது, பிரிந்து கிடந்த அதிமுகவை நான்தான் ஒருங்கிணைத்தேன் என குருமூர்த்தி தெரிவித்திருந்தார். இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் துணை முதல்வர் ஓபிஎஸ் குறித்த குருமூர்த்தியின் பேச்சு ஆணவத்தின் உச்சம்.

ஜெயக்குமார்
குருமூர்த்தியின் பேச்சு திமிர்வாதத்தின் உச்சம், இவ்வளவு திமிர் கூடாது; நாவடக்கம் தேவை. அதிமுகவின் மீது கைவைத்து வாங்கிக் கட்டிக் கொண்ட வரலாறும் குருமூர்த்திக்கு உண்டு என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications