குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்... பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை: மதுரை கோட்டத்தில் நடைபெற இருக்கும் பராமரிப்பு பணி காரணமாக, சில எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட இருப்பதாகத் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. அதேபோல் கன்னியாகுமரியில் இருந்து வருகிற 10, 17, 24 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஹைதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்று பாதையில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், மதுரை கோட்டத்தில் நடைபெற இருக்கும் பராமரிப்பு பணி காரணமாக, சில எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

நாகர்கோவிலில் இருந்து வருகிற 5, 9, 12, 16, 19, 20, 30 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16352), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாகச் செல்லும். திண்டுக்கல் செல்லாது. கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
கன்னியாகுமரியில் இருந்து வருகிற 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12666), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாகச் செல்லும். கொடைக்கானல் சாலை மற்றும் திண்டுக்கல் செல்லாது. கூடுதலாக சிவகங்கை, புதுக்கோட்டை ஆகியவற்றில் நின்று செல்லும்.
குருவாயூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை), 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 15, 16, 17, 18, 19, 20, 23, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16128), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாகச் செல்லும். மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை செல்லாது. கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து வருகிற 10, 17, 24 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஹைதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (17070), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாகச் செல்லும். கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் செல்லாது. கூடுதலாக சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
தூத்துக்குடியில் இருந்து வருகிற 29-ந்தேதி காலை 7.40 மணிக்கு புறப்பட்டு காச்சிகுடா (ஹைதராபாத்) செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (17616), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகச் செல்லும். மதுரை, திண்டுக்கல் செல்லாது. கூடுதலாக, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகியவற்றில் நின்று செல்லும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications