Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலி கண்ணீர்.. ஜி.வி.பிரகாஷை ஏமாற்றி ரூ.20,000-ஐ சுருட்டிய நபர்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னிடம் உதவி கேட்கும் ரசிகர்களுக்கு உடனடியாக உதவுவது ஜிவி பிரகாஷின் வழக்கம். இந்நிலையில் தனது அம்மாவின் இறுதிச் சடங்குக்கு உதவி செய்யுங்கள் எனக் கூறி ஜிவி பிரகாஷை ஏமாற்றி ரூபாய் 20,000-ஐ ஒரு நபர் சுருட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் தான் ஜிவி பிரகாஷ். சிறுவயதிலேயே 'ஜென்டில்மேன்', 'பம்பாய்' போன்ற திரைப்படங்களில் பாடகராக அவதாரம் எடுத்த ஜிவி பிரகாஷ், படிப்பு முடிந்த கையோடு, இசையமைப்பாளராக திரையுலகில் அவதாரம் எடுத்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்த முதல் படமான 'வெயில்' படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

GV Prakash Cheated of 20000 by Man Seeking Help for Mother s Funeral

ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான பொல்லாதவன், கிரீடம், ஆனந்த தாண்டவம், அங்காடி தெரு, மதராசபட்டினம், ராஜா ராணி, அசுரன், சூரரைப் போற்று, ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை, பென்சில், ஜெயில், பேச்சிலர், கள்வன், டியர் என பல படங்களில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

திரை உலகத் தாண்டி சமூகம் சார்ந்த விஷயங்களிலும் தனக்கு தோன்றிய கருத்துகளை வெளிப்படையாக பேசுவது ஜிவி பிரகாஷின் வழக்கம். சமூக வலைதளங்களிலும் சமூகம், அரசியல் தொடர்பான கருத்துகளை பதிவிடுவார். மேலும் பலருக்கு உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார் ஜிவி பிரகாஷ்.

எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் தன்னிடம் உதவி கேட்கும் ரசிகர்களுக்கு உடனடியாக உதவுவது ஜிவி பிரகாஷின் வழக்கம். கஷ்டப்படுபவர்கள் பண உதவி கேட்டால் உடனே போன் நம்பரை வாங்கி ஜிபேவில் அனுப்பிவிடுவார். கல்லூரி தேர்வு கட்டவோ, சாப்பிட பணம் இல்லை என்றோ யாராவது சொன்னால் உடனடியாக மனம் இரங்கி பணம் அனுப்பி விடுவார் ஜிவி பிரகாஷ். இப்படி பலர் ஜிவி பிரகாஷிடம் உதவி பெற்றுள்ளனர்.

அப்படித்தான் ஜிவி பிரகாஷை டேக் செய்து பிரசன்னா சதீஷ் என்பவர் எக்ஸ் தளத்தில் உதவி கேட்டு பதிவிட்டிருந்தார். "கண்ணீருடன் பதிவு.. எங்களுக்கு சிறு வயதிலேயே அப்பா தவறிவிட்டார். அம்மா தான் வேலைக்கு போய் எங்களை படிக்க வைத்துக் கொண்டிருந்தார். இப்போது அம்மாவும் தவறிவிட்டார். நானும் தங்கச்சியும் படிக்கிறோம் இறுதிச் சடங்கு செய்ய போதிய வசதி இல்லை. உதவி பண்ண யாருமில்லை. நானும் தங்கச்சியும் என்ன செய்வது எனத் தெரியாமல் இருக்கிறோம். இறுதி சடங்கு செய்ய உதவி பண்ணுங்க அண்ணா" என பதிவிட்டிருந்தார். சடலத்தின் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.

அதற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உடனே ஜிபே நம்பர் அனுப்புமாறு கேட்டிருந்தார். அந்த நபர் ஜிபே எண் அனுப்பியதும், உடனடியாக 20,000 ரூபாயை அவருக்கு கூகுள் பே வாயிலாக அனுப்பி விட்டு அதற்கான ஸ்கிரீன்ஷாட்டை சமூக வலைதளத்தில் பதிவிட்டார் ஜிவி பிரகாஷ். பணம் கிடைத்ததும் அந்த நபர் நன்றியும் தெரிவித்தார். ஆனால், அதன்பிறகு நடந்ததுதான் ட்விஸ்ட்.

அந்த நபர் பதிவிட்டிருந்த புகைப்படம், கடந்த 2022 ஆம் ஆண்டே யூடியூபில் பதிவிட்டிருந்த வீடியோவில் இருந்ததை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். அம்மாவின் இறுதிச் சடங்குக்கு உதவி செய்யுங்கள் எனக் கூறி ஜிவி பிரகாஷை ஏமாற்றி ரூபாய் 20,000 ஐ அந்த நபர் சுருட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெட்டிசன்கள் பலரும் பிரசன்னா சதீஷ் என்ற நபரின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர். இப்படி போலியாக பணம் பறித்தால் வேறு யாருக்கேனும் உதவ எப்படி மனம் வரும்? என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஜிவி பிரகாஷின் இரக்க குணத்தை பயன்படுத்தி ஏமாற்றிய நபரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+