உடனே அவசரமாக 1000 ரூபாய் வேண்டும்..உதவி கேட்டவருக்கு ஜிவி பிரகாஷ் கொடுத்த இன்ப அதிர்ச்சி
சென்னை: சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தனது ரசிகர்கள் யாராவது அவசர உதவி கேட்டால், அவர்களுக்கு உடனே உதவி செய்யும் வழக்கம் உள்ளவர். அப்படி உதவி கிடைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் ரவி என்ற ரசிகர், அண்ணா எனக்கு 1000 ரூபாய் அவசரமாக வேண்டும் என்று கேட்டுள்ளார். அவருக்கு ஜி.வி. பிரகாஷ் கேட்டதைவிட அதிகமாக 1500 ரூபாய் உதவி செய்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் தங்களால் முடிந்த உதவியை ரசிகர்களுக்கு செய்து வருகிறார்கள். தங்களிடம் உதவி கேட்டு வருவோருக்கு கல்விக்கட்டணம் செலுத்துவது, மருத்துவ சிகிச்சைக்கு உதவுவது, வீட்டிற்கு மளிகை சாமான்கள் வாங்க உதவி, வறுமையில் உள்ளவர்களுக்கு வீடு கட்ட உதவுவது, திருமணத்திற்கு உதவுவது என பல விஷயங்களை சத்தம் இல்லாமல் செய்து வருகிறார்கள்.. இப்படி பல நடிகர்கள் செய்த உதவி யாருக்குமே வெளியில் தெரியவது இல்லை..அவர்களால் பயன் அடைந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியில் சொன்னால் செய்த உதவிகள் வெளியே வருகின்றன.

நடிகரும், பிரபல இசைமையப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமார், தனது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உதவி கேட்டால், தயங்காமல் உதவி செய்வார். அந்த வகையில் முன்பு மார்ச் மாதம் ஜி.வி. பிரகாஷ்குமார் தன்னிடம் உதவிகேட்ட ரசிகர் ஒருவருக்கு உடை வாங்க ரூபாய் ஆறு ஆயிரம் கொடுத்திருந்தார். இதுபற்றி ஜி.வி. பிரகாஷ்க்கு சமூகவலைதளத்தில் மெசேஜ் செய்த ரசிகர், மிகவும் நன்றிகள் அண்ணா. இந்த பணத்தை வைத்து நான் டீ-சர்ட் மற்றும் பேண்ட் வாங்கிக் கொள்வேன் என தெரிவித்தார். டீ-சர்ட் மற்றும் பேண்ட் கொரியர் செய்வதாக கூறினீர்கள். டி-சர்ட் நான் போட்டுக்குவேன். அப்பாக்கு மருந்து அடிக்கும்போது அரிக்கும் அதானால பேண்ட் அவரிடம் கொடுத்துவிடுவேன் என்றும் கூறியிருந்தார்.
இதனிடையே கடந்த சில மாதம் முன்பு ரசிகர் ஒருவர், 'அண்ணா நாலு நாளா சரியா சாப்பிடாம நானும் எனது மனைவியும் இருக்கிறோம். உங்ககிட்ட 500 ரூபாய் இருந்தா G Pay பண்ணுங்க ப்ளீஸ்' என்று பதிவிட்டு இருந்தார். ரசிகரின் பதிவை பார்த்த ஜி. வி. பிரகாஷ் உடனே ரிப்ளை செய்தார். அதாவது அந்த ரசிகரிடம், 'உங்களின் G Pay நம்பரை அனுப்புங்கள்' என்று பதிவிட்டார். அதற்கு அந்த ரசிகர் அவருடைய நண்பரை அனுப்பி, 'ப்ளீஸ் அண்ணா' என்று மீண்டும் உதவி கேட்டிருந்தார். அதைப் பார்த்த ஜி. வி. பிரகாஷ், 'அந்த ரசிகருக்கு 2500 ரூபாய் அனுப்பி, நல்லா சாப்பிடுங்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்' என்று பதிவிட்டார்,.
தற்போது ஜி. வி. பிரகாஷ் மீண்டும் ஒரு ரசிகருக்கு 1500 ரூபாய் உதவி செய்துள்ளார். ரவிக்குமார் என்ற ரசிகர் வெளியிட்ட பதிவில், வணக்கம் அண்ணா, எனக்கு அவசரமாக 1000 ரூபாய் தேவைப்படுகிறது. நாளையே உங்களுக்கு திரும்ப தருகிறேன். உதவுங்கள் அண்ணா என்று கூறியிருந்தார். அவருக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் 1500 அனுப்பி வைத்து ஸ்கிரீன்ஷாட் அனுப்பினார். இதை பார்த்த நெகிழ்ந்த ரசிகர், கேட்டதற்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பது கடவுளை விட மேலானது.. நீங்கள் உண்மையில் மனித உருவில் உள்ள கடவுள். நான் மதிக்கும் ஒரே தலைவர்.. ரசிகர்களை மதிக்கும் உங்களுக்கு நான் எப்போதும் ரசிகனாக இருப்பேன்" என்று கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications