சீக்ரெட் எல்லாம் வெளியே வருதே! மோடிக்கு பிரஷர் ஏற்றிய குமாரசாமி! மைனாரிட்டி ஆட்சியில் இவ்ளோ சிக்கலா
சென்னை: முக்கியமான சில அமைச்சரவை துறைகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து தற்போது பாஜகவின் என்டிஏ அரசு கடுமையான சிக்கலில் மாட்டி உள்ளது.
சமீபத்தில் பெங்களூரில் ஜேடி(எஸ்) கட்சித் தொண்டர்களிடம் பேசுகையில், மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் எச் டி குமாரசாமி, அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோ சிப் தயாரிப்பு நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜிக்கு குஜராத் அரசு வழங்கிய மானியம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோ சிப் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோன் டெக்னாலஜிக்கு வழங்கப்பட்ட மானியம் நியாயமானதாக தெரியவில்லை. அவர்கள் அங்கே தொழில் தொடங்குவதற்கு செய்த முதலீட்டில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தை மானியமாக வழங்கி உள்ளனர். இது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்று கூறினார். அதன்படி ஒரு நாள் கழித்து, மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி தான் சொன்ன கருத்தில் இருந்து பின்வாங்கினார். ஊடகங்களில் 'தவறாக மேற்கோள் காட்டப்பட்டதாக' அவர் கூறினார்.
ஆனால் முக்கியமான சில அமைச்சரவை துறைகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்து தற்போது பாஜகவின் என்டிஏ அரசு கடுமையான சிக்கலில் மாட்டி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் செய்யப்பட்ட முக்கியமான ஒப்பந்தங்கள் பல கூட்டணி கட்சிகள் மூலம் வெளியே கசியும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கிண்டல்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இதை கிண்டல் செய்துள்ளார். அதில் ஒன்றிய அரசின் கனரக தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி ஒரு மாபெரும் உண்மையினை வெளியிட்டு ஒரு கேள்வியையும் கேட்டுள்ளார்.
குஜராத்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலையினை 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் மைக்ரான் டெக்னாலஜி எனும் அமெரிக்க கம்பெனி துவங்கியுள்ளது.
இந்த 2.5 பில்லியன் டாலர் முதலீட்டில் 70% அதாவது 2 பில்லியன் டாலரை ஒன்றிய-மாநில அரசுகள் மானியமாக வழங்குகின்றன.
இந்நிறுவனம் 5000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஒரு நபருக்கான வேலைவாய்ப்புக்கு நமது அரசுகள் கொடுக்கும் தொகை₹ 3.5 கோடி. இது தேவையா என்று கேட்கிறார் குமாரசாமி.
மற்ற மாநில அரசுகளுக்கு இதைப்போன்ற சலுகைகளை வழங்குமா மோடி அரசு? இவ்வளவு பணத்தையும் சிறு,குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு வழங்கினால் எத்தனை லட்சம் இந்தியர்களுக்கு வேலை கிடைக்கும்! சபாஷ்! குமாரசாமி.சரியான கேள்வி!, என்று கிண்டல் செய்துள்ளார்.
மைனாரிட்டி ஆட்சி: பாஜக மெஜாரிட்டி இல்லை: லோக்சபா 2024 தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாமல் வீழ்ந்து உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இன்னும் சில உதிரி கட்சிகள் சேர்ந்து ஆதரவு கொடுத்தால் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.
2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
240 இடங்களில் பாஜக வென்றுள்ளது இதனால் பாஜக ஆட்சி நீடிக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை. பாஜக ஆட்சி நீடிக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி நீடிக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி நீடிக்க முடியாது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications