தமிழகத்தில் பாஜக படு தோல்வி அடைந்தாலும்.. தளராத எச். ராஜா.. பட்டாசு, ஸ்வீட் உடன் கொண்டாட்டம்
சென்னை: தமிழகத்தில் பாஜக தோல்வி அடைந்தாலும் மத்தியில் ஆட்சியை பிடித்ததால் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
நாட்டின் 18 வது லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தேசிய அளவில் 240 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் பிரசாரத்தின் போது 400 இடங்களை பெறுவோம் என்று கூறி வந்த பாஜக தலைவர்களுக்கு தேர்தல் முடிவு அதிர்ச்சியை அளித்தது.

இதேபோல் தமிழகத்திலும் பாஜக வளர்கிறது, தமிழக மக்கள் பாஜகவுக்கு சப்போர்ட் செய்கிறார்கள் என்று பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் பேசி வந்த நிலையில், இங்கும் பாஜகவுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தோற்று போனார். தமிழகத்தில் காலூன்ற நினைத்து சினிமா பிரபலங்கள், முக்கிய ஸ்டார் தலைவர்களை களமிறக்கியும் பாஜக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. ஸ்டாலின் கூறியவாறு நாற்பதும் நமதே என்பதனை சொல்லி அடித்து திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று கிளீன் ஸ்வீப் செய்தது.
இதேபோல் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் எதிர்பார்த்ததை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் 52 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் இந்த முறை 99 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் பாஜக 340 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது.

தெலுங்கு தேசம் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்று ஆதரவு கடிதம் எழுதிக்கொடுத்ததால் வரும் 8 ஆம் தேதி பிரதமர் மோடி 3 வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக தோற்றாலும் மத்தியில் பாஜக ஆட்சி அமைவதை கொண்டாடும் வகையில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பட்டாசு வெடித்தும் லட்டு, ஸ்வீட்ஸ்கள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சென்னை கமலாலயத்தில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பட்டாசு கொளுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் பாஜக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications