கோவிலுக்கு போகாதீங்க படத்துக்கு போங்க..குடும்பமே இல்லையாம்! பற்ற வைத்த மிஷ்கின்..பறந்து வந்த கண்டனம்
சென்னை: தி ப்ரூப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கோயிலுக்கு போக வேண்டாம் தியேட்டரில் போய் படம் பாருங்கள் என இயக்குனர் மிஷ்கின் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் கண்டனத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மிஷ்கினின் பேச்சு பொறுப்பற்றது என விமர்சனம் செய்துள்ளார்.
கபாலி பேராண்மை உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை தன்சிகா தற்போது தி ப்ரூப் என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை டான்ஸ் மாஸ்டர் ஆன ராதிகா இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் முலம் அவர் இயக்குனராக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மே மூன்றாம் தேதி வெளியாகிறது இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டு பேசினார்.
மிஷ்கின்: அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சுதான் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது நிகழ்ச்சியில் பேசிய அவர்,கோயிலுக்குப் போகாதீங்க தியேட்டருக்கு போங்க.. ஒரு குடும்பத்தில் 5 பேர் போய் படம் பார்க்கலைனா அது குடும்பமே இல்லை ..வீட்ல வெங்காயம் வெட்டிக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா, புருஷன் கூட சண்டை போட்டுக்கிட்டே படத்தை பார்ப்பீங்களா? புது டிரெஸ் போட்டு பர்ஃப்யூம் அடித்துக் கொண்டு காரில் ஜம்முன்னு தியேட்டருக்கு சென்று பாப்கார்ன் வாங்கிக் கொண்டு படத்தை அப்படி பார்க்க வேண்டும்” என்றார்.
தியேட்டர்கள்: மேலும்,”என்னைக்காவது சிவனை பார்த்து இருக்கீங்களா? என்னை பொறுத்தவரையில் சிவாஜி கணேசன் தான் சிவன். அவர் நடிப்பில் தான் சிவனை பார்த்திருக்கிறேன். கோயில் உங்களுக்கு எதுவும் தராது. தியேட்டரில் சந்தோஷமாக சிரித்துக் கொண்டும், உணர்ச்சி பூர்வமான படங்களை அழுது கொண்டும் கொண்டாட்டத்துடன் பார்க்கலாம்” என பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது.
கடும் கண்டனம்: நடிகர் இயக்குனர் மிஷ்கினின் பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. எதற்கெடுத்தாலும் இந்து மதத்தை விமர்சித்து பேசுவதையே மிஸ்கின் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பிற மதங்களை பார்த்து இப்படி பேச முடியுமா என கேள்வி எழுப்பி இருக்கின்றனர். மேலும் தியேட்டர்களில் ஒரு நபருக்கே 200 முதல் 300 ரூபாய் வரை செலவாகும் நிலையில் 5 பேர் கொண்ட குடும்பம் எப்படி தியேட்டருக்கு போக முடியும் முதலில் போய் தியேட்டர் ஓனர்களை கேளுங்கள் மிஸ்கின் என விமர்சித்து வருகின்றனர்.
எச்.ராஜா: இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய பாஜக மூத்த தலைவர் எச். ராஜா,”கோயிலுக்கு செல்வது என்பது ஒரு ஒழுக்கமான நடைமுறை. இதை காலம் காலமாக நாம் பின்பற்றி வருகிறோம். அதே நேரத்தில் திரைப்படங்களில் ஓரிரு படங்களில் சமூக கருத்துக்கள் கொண்டவையாக உள்ளன். மற்ற படங்கள் சமூகத்தை சீரழிப்பதாகவே உள்ளது. எனவே தியேட்டர்களுக்கு செல்ல வேண்டும் கோயிலுக்கு போகாதீர்கள் என பேசுவது பொறுப்பற்ற பேச்சு எனவும் இது கடும் கண்டனத்திற்குரியது” என தெரிவித்திருக்கிறார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications