"குத்தினது திமுகவா இருந்தால்.. இருப்போம்" ஆர்.எஸ்.பாரதியை சுட்டிக்காட்டி.. இடித்து காட்டும் எச்.ராஜா
ஆர்.எஸ். பாரதி, மீடியாவை குத்திக்காட்டி எச்.ராஜா ட்வீட் பதிவிட்டுள்ளார்
Recommended Video
சென்னை: "குத்தினது திமுகவா இருந்தால் பொத்திக்கிட்டு இருப்போம்" என்று ஒரு மீம் போட்டு திமுகவின் ஆர்எஸ்.பாரதியின் கருத்துக்கும், தமிழக மீடியாக்களை இடித்துரைத்தும் நாசூக்காக ஒரு கண்டனம் பதிவிட்டுள்ளார் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா!
சென்னை அன்பகத்தில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடந்த கூட்டத்தில், திராவிட இயக்கத்தின் சாதனைகள் குறித்து திமுகவின் ஆர்எஸ் பாரதி பேசியிருந்தார்.
அதில், பல விஷயங்கள் பல தரப்பினரையும் மரியாதை குறைவாக குறிப்பிட்டிருந்தார்.. அதில் பாஜகவையும், தமிழக மீடியாக்களையும் சரமாரி விமர்சித்தும் கூறியிருந்தார்.

விமோசனம்
"திமுக. ஒழிந்தால்தான் தமிழ்நாட்டுக்கு விமோசனம் என எச்.ராஜா பேசுவதற்கு அந்த தைரியத்தை தந்தது யார்? நாமெல்லாம் கோழைகளாகிவிட்டோம்.... வட மாநிலத்துல இருக்குறவனுக்கு அறிவே கிடையாது.. இந்த டிவிகாரனுக இருக்கானுக பாருங்க.. அவனுக மாதிரி அயோக்கியனுக உலகத்திலேயே எவனும் கிடையாது. பம்பாயில இருக்க ரெட் லைட் ஏரியா மாதிரி நடத்துறானுக கம்பனிய..காசு வருதுங்கிற காரணத்துக்காக எதை வேணா கிளப்பிவிடுறது" என்று இன்னும் பல கருத்துக்களை முன் வைத்து பேசியிருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனங்கள் எழுந்தன.

ஆர்எஸ் பாரதி
ஊடகத்தினரும் அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் ஆர்.எஸ் பாரதி தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்... எந்த உள்நோக்கத்தோடும் பேசவில்லை... நான் தவறாக சொல்லவில்லை. யாரையும் தனிப்பட்ட வகையில் பேசவில்லை... சில ஊடகங்களைதான் சொன்னேன்" என்று விளக்கம் தந்தார். ஆனாலும் இதனை பாஜக தரப்பு லேசில் விடவில்லை.
|
படித்ததில் பிடித்தது
எதற்கெடுத்தாலும் ட்வீட் போட்டு கேள்வி எழுப்பும் எச்.ராஜா இதற்கு எதுவுமே பேசவில்லை.. இத்தனைக்கும் ஆர்எஸ் பாரதி குறிப்பிட்டு பேசியிருந்தது எச்.ராஜாவைதான்.. ஆனால் எச்.ராஜாவோ 2 சொற்களில் ட்வீட் ஒன்றினை பதிவிட்டு, ஒரு மீம் போட்டுள்ளார்.. "சுந்தரபாண்டியன்" படத்தின் மீம் எடுத்து போட்டு "படித்ததில் பிடித்தது" என்று தெரிவித்துள்ளார். 'குத்தினது திமுகவா இருந்தால் பொத்திக்கிட்டு இருப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

அட்டகாசம்.. செம...
எச்.ராஜா எதையுமே குறிப்பிடாமல், வெறும் இந்த மீம் பதிவிட்டதற்கும்கூட ஏகப்பட்ட கமெண்ட்கள் விழுகின்றன.. "ஆர்.எஸ்.பாரதி அவர்களை அவரது மகனே கண்டித்திருக்கிறார். எஸ்.வி.சேகரை ஒரு பார்ப்பனராவது கண்டித்ததுண்டா?" என்று ஒருவர் கேட்டுள்ளார்.. "அட்டகாசம்... செம.. எப்படி இப்படி டபுள் மீனிங்க்ல டுவிட் போடுறீங்க" என்று இன்னொருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications