அமைச்சர் பிடிஆர் மனைவி பெயரை பயன்படுத்தி தரம் தாழ்ந்த பேச்சு!எச்.ராஜாவிற்கு குவியும் கண்டனங்கள்
சென்னை: நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மனைவி பெயரை பயன்படுத்தி பாஜக மூத்த நிர்வாகி எச். ராஜா பேசியது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது பாஜக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. சமீபத்தில் இலவசங்கள் தொடர்பான வாதத்தில் பிடிஆர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து இருந்தார்.
வடஇந்திய ஊடகங்களில் பேசிய பிடிஆர், எங்களுக்கு அறிவுரை சொல்பவர்களுக்கு முதலில் சட்ட ரீதியான அனுமதி இருக்க வேண்டும். உங்களின் சாதனைகள், செயல்பாடுகள் எங்களை விட சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லலாம்.
நீங்கள் கடனை அடைத்துவிட்டீர்கள், பொருளாதாரத்தை சரி செய்துவிட்டீர்கள், தனி நபர் வருமானத்தை உயர்த்திவிட்டீர்கள் என்றால் உங்கள் பேச்சை நாங்கள் கேட்கலாம். அது எதுவுமே இல்லாத போது உங்களின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?, என்று குறிப்பிட்டார்.

பதிலடி
இந்த நிலையில் பிடிஆருக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதில் அளித்தார். அதில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் ஸ்டாலினைதான் மறைமுகமாக விமர்சனம் செய்கிறார். நான் வெளிநாட்டில் படித்து இருக்கிறேன். நான் வெளிநாட்டில் டிகிரி வாங்கி இருக்கிறேன். உங்களுக்கு பெரிய படிப்பு அறிவு இருக்கிறதா? நீங்க எல்லாம் மத்திய அரசில் நோபல் பரிசு வாங்கினீர்களா? நீங்கள் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும். நான் நிதி அமைச்சர் . நீங்கள் வெளிநாட்டில் எல்லாம் படித்துவிட்டு வந்தீர்களா? உங்களிடம் நான் ஏன் அறிவுரை கேட்க வேண்டும் என்று பிடிஆர் சொல்கிறார். அவர் ஏன் அப்படி சொல்கிறார் என்று என்னிடம் கேட்டீர்கள் என்றால்.. அவர் மாநில முதல்வர் ஸ்டாலினுக்கு மறைமுகமாக விமர்சனம் வைக்கிறார் என்று நான் பார்க்கிறேன்.

எச். ராஜா
அவர் முதல்வரை மறைமுகமாக விமர்சனம் செய்கிறார் . இந்த நிலையில் தற்போது பிடிஆரை விமர்சனம் செய்து பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பேசி உள்ளார். அதில், நான் கேட்கிறேன்.. ஒரு கிறிஸ்துவ பாதிரியாரை இந்த நாக்கு கொழுப்பு எடுத்த பிடிஆர்.. நாய், பேய் என்று பேசுவாரா? அல்லது ஒரு முஸ்லீம் மௌலியை இந்த பிடிஆர் அதே வார்த்தையை பயன்படுத்தி பேசுவாரா? இந்து என்றால் அவ்வளவு இளக்காரமாக போய்விட்டதா? சொல்லுங்கள். உங்கள் வீட்டில் மார்கரெட் மேடம் இருக்கிறீர்கள்.

என்ன சொன்னார்
அவரை சந்தோச படுத்த வேண்டும் என்றால் அதற்கு நிறைய வழிகள் உள்ளது. அதற்காக ஒரு இந்து தலைவரை அசிங்கப்படுத்தி பேச வேண்டும் என்று அவசியம் இல்லையே. என்ன மோசம். என்ன மோசமான குணம், கேரக்டர் உங்களுடையது பிடிஆர் தியாகராஜன், என்று எச். ராஜா பேசினார். அவர் இந்த பேச்சில் இன்னும் சில சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தினார்.

விமர்சனம்
அச்சில் ஏற்ற முடியாத சில வார்த்தைகளை அவர் இதில் பயன்படுத்தினார். முக்கியமாக பிடிஆரை மிகவும் தரைகுறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இந்த நிலையில் எச். ராஜாவின் கருத்துக்கு கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசியலில் என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களை இழுத்து பேச மாட்டார்கள். ஆனால் எச். ராஜா திடீரென பிடிஆர் மனைவி பற்றி பேசியது விமர்சனங்களை சந்தித்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications