அதெப்படி திருமாவளவன் இப்படி சொல்லலாம்.. கமலை கைது பண்ணுங்க.. எச். ராஜா பிடிவாதம்
கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: கமல் விஷயத்தை பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்ததே எச்.ராஜாதான்! 2 நாட்களாக கமல் மீது வழக்குகள், புகார்கள், கண்டனங்கள், எழுந்தாலும், அவரை கைது செய்ய வேண்டும் என்பதே எச்.ராஜாவின் ஒரே நோக்கமாக உள்ளது!
நாளுக்கு நாள் கொழுந்துவிட்டு எரிந்து வரும், கமலின் பேச்சிற்கு ண்டனங்களும், ஆதரவுகளும் பெருகி வருகின்றன. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் தனது கருத்தை கமலுக்கு ஆதரவாக சொல்லி உள்ளார்.

கோட்சேவிற்கு ஆதரவாக மோடியின் பேச்சு இருப்பதாக கண்டனம் தெரிவித்த திருமாளவளவன், கமலுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பை அளிக்கவும் வலியுறுத்தினார். திருமாவளவன் இப்படி சொன்னது, எச்.ராஜாவுக்கு ஆகவில்லை போலும். உடனடியாக வந்து ஒரு ட்வீட்டை போட்டுவிட்டார்.
"கமலுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பை அளிக்கவேண்டும்!" திருமாவளவன் வலியுறுத்தல்...!" என்ற செய்தியை பதிவிட்டுவிட்டு, அத்துடன் "பள்ளப்பட்டியில் கலவரத்தை தூண்டும் நோக்குடன் பேசிய கமலஹாசனை அரசு கைது செய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
பள்ளப்பட்டியில் கலவரத்தை தூண்டும் நோக்குடன் பேசிய கமலஹாசனை அரசு கைதுசெய்ய வேண்டும் https://t.co/fMB6RteILp
— Chowkidar H Raja (@HRajaBJP) May 15, 2019
அது மட்டுல்லை, "திருப்பரங்குன்றத்தில் கமல் பரப்புரையில் இந்துக்களை இழிவு படுத்த மாட்டார் என்று எதிர்பார்ப்போம்" என்றுகூட எச்.ராஜா நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
திருப்பரங்குன்றத்தில் கமல் பரப்புரையில் இந்துக்களை இழிவு படுத்த மாட்டார் என்று எதிர்பார்ப்போம்.
— Chowkidar H Raja (@HRajaBJP) May 15, 2019
ஆனால், பாஜக, இந்து அமைப்பினரின் பேச்சை கொஞ்சம் கூட காதில் வாங்காமல் கமல், இன்றைய பிரச்சாரத்தில்கூட, கேஷூவலாகவும், அசால்ட்டாகவும் பேசி வருகிறார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications