குடியுரிமை திருத்தச் சட்டத்தை "ஃப்ளோசார்ட்" மூலம் விளக்கம்.. அமித்ஷாவை மிஞ்சிய எச் ராஜா
Recommended Video
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் "ப்ளோசார்ட்" மூலம் பாஜக தேசிய செயலாளர் விளக்கியுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்ஸி, ஜோரோஸ்டிரியன்கள் உள்ளிட்டோர் 2015-ஆம் ஆண்டு முன்னர் இந்தியாவில் அகதிகளாக வந்திருந்தால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதுதான் அந்த திருத்தம்.
இதில் முஸ்லீம்கள், இலங்கை தமிழர்களின் பட்டியல் இல்லை. இதனால் நாடு முழுவதும் போராட்டம் நிலவி வருகிறது.

எச் ராஜா
இந்த சட்டத்தை சிலர் எதிர்க்கவும், சிலர் ஆதரிக்கவும் செய்கின்றனர். இன்னும் சிலர் பட்டும் படாமல் கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் போராட்டம் நடத்துவோருக்கு குடியுரிமை சட்டம் குறித்து எளிதாக புரிய வைப்பதற்காக எச் ராஜா மிகவும் மெனக்கெட்டுள்ளார்.
ஃப்ளோசார்ட்
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு "ஃப்ளோசார்ட்" வரைந்துள்ளார். அவர் கூறுகையில் குடியுரிமை சட்டத் திருத்தம் 2019 என்ற தலைப்பில் முறையான ஆவணங்கள் உள்ளனவா, ஆம் எனில் இந்தியாவில் வசிக்கலாம். இல்லை என்றால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தவரா நீங்கள் என இரு கேள்விகள் வருகின்றன.

2014-ஆம் ஆண்டுக்கு பின்னர்
இதைத் தொடர்ந்து மேற்கண்ட கேள்விக்கு ஆம் என்றால் இந்தியாவிற்குள் எப்போது நுழைந்தீர்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது போல் இல்லை என்றால் குடியுரிமை இல்லை. 2014-ஆம் ஆண்டு முன், 2014-ஆம் ஆண்டுக்கு பின் என இரு ஆப்ஷன்கள் உள்ளன.

இந்தியாவில் வசிக்கலாம்
2014-முன் என்றால் மதக்காரணங்களுக்காக துன்புறுத்தப்பட்டீர்களா? ஆம் எனில் நீங்கள் இந்தியாவில் வசிக்கலாம். இல்லை என்றால் குடியுரிமை இல்லை. 2014-ஆம் ஆண்டுக்கு பின் இந்தியாவில் நுழைந்திருந்தால் குடியுரிமை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications