ஹெச்.ராஜா உடல்நிலை நிலவரம்.. அவரின் அட்மின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். சென்னையில் நேற்று நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக நிர்வாகி ஹெச். ராஜா திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஹெச். ராஜா உடல்நலம் குறித்து அவரது பேஸ்புக் பக்கத்தில் அவரின் அட்மின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று பிரபல ஆங்கில ஊடகத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஹெச். ராஜா உடல்நலக்குறைவு
பாஜக சார்பில் அந்தக் கட்சியின் மூத்த தலைவரான ஹெச். ராஜா கலந்து கொண்டார். நெறியாளர் கேள்விக்கு வழக்கம் போல அவர் காரசாரமாக பதில் அளித்து கொண்டிருந்தார். கோபமாக பதிலளித்து கொண்டிருந்தபோது ராஜாவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. முதலுதவி கொடுக்கப்பட்டும் முன்னேற்றம் ஏற்படாததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஹெச். ராஜா சிகிச்சை பெற்று வருகிறார். முதல்கட்ட தகவல்படி அதிக ரத்த கொதிப்பு மற்றும் முடக்கு வாதத்தால் ராஜா பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பாஜக தொண்டர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து வருகிறார்கள்.
அட்மின் அறிவிப்பு
இதுகுறித்து ஹெச்.ராஜாவின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவரின் அட்மின் வெளியிட்டுள்ள பதிவில், "ஹெச்.ராஜா ஜி அவர்கள் நேற்றைய தினம் NDTV விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் உடனடியாக சென்னையிலுள்ள பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்னும் ஓரிரு தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற்று இறைவன் அருளால் பூரண குணமடைந்து நலமோடு வீடு திரும்புவார். மேலும் ஹெச்.ராஜா ஜி அவர்கள் மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அவரது அலைபேசி எண்ணிற்கு தேசபக்த உறவுகள் சில தினங்களுக்கு தயவுசெய்வு அழைக்கவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு TEAM HR" என்று கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
பல்ப் கொடுத்த பாஜக.. கோபத்தில் குஷ்பூ! நயினாருக்கு தெரியாமல் ஆடிய கேம்! சீனுக்குள் வந்த சுந்தர்.சி! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications