பாஜக சீனியர் எச்.ராஜா உடல்நலம் எப்படியிருக்கு? அப்பல்லோ அறிக்கை வந்து 2 நாளாச்சு! பதறும் ஆதரவாளர்கள்
சென்னை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா (68) உடல்நலக் குறைவால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் எப்படியிருக்கிறார், அவருக்கு என்னாச்சு? என்பது குறித்து பார்க்கலாம்.
தனியார் செய்தி ஊடக தொலைக்காட்சிக்கான நேர்காணல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. அந்த நிகழ்வில் ஆக்ரோஷமாக தனது கருத்துகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திடீரென மயங்கி விழுந்தார்.
அப்போது அந்த நிகழ்வுக்கு வந்திருந்த முன்னாள் ஆளுநரும் மருத்துவருமான தமிழிசை சவுந்திரராஜன்தான் அவருக்கு முதலுதவி சிகிச்சை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அவர் உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ரத்த சர்க்கரை அளவு
அவருக்கு ரத்த சர்க்கரையின் அளவு குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருந்ததால் அவரால் நிற்க முடியாமல், மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து கடந்த 31 ஆம் தேதி சென்னை அப்பல்லோ நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
எச்.ராஜாவுக்கு பக்கவாதம்
அதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நலம் தேறி வருகிறது. அவர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். தனது உறவினர்கள், நண்பர்களுடன் பேசக் கூடிய நிலையில் அவர் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பல்லோவில் சிகிச்சை
இந்த நிலையில் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நலம் விசாரித்தார். மேலும் அவரது உடல்நிலை தேற வேண்டும் என நேற்று தைப்பூசம் நாளில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை காவடி எடுத்து முருகனிடம் வேண்டிக் கொண்டார்.
அப்பல்லோ மருத்துவமனை
இந்த நிலையில் எச்.ராஜா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் சென்றிருந்தனர். அங்கு அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தனர்.
எச்.ராஜா
எச்.ராஜா சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் ஏதும் வெளியாகாததால் அவரது ஆதரவாளர்களும் பாஜகவினரும் அவருக்கு என்னாச்சோ என தவித்து போய் இருக்கிறார்கள். மருத்துவமனை கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையின்படி அவர் நலமாக இருப்பதாக சொல்லப்படுவதால் அவர் விரைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என சொல்லப்படுகிறது.
தமிழிசை பதிவு
இந்த நிலையில் தமிழிசை சவுந்திரராஜன் தனது ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் "அண்ணன்
@HRajaBJP அவர்கள்.. உடல் நலம் தேறிவருகிறார் என்ற மருத்துவ அறிக்கை எனக்கு ஆறுதலை தருகிறது.. ஆனால் அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் உலா வரும் சில செய்திகள் வியப்பையும் வருத்தத்தையும் அளிக்கிறது.. அவர் கலந்து கொண்ட விவாதத்தில் அடுத்த அமர்வு என்னுடையது என்ற வகையில் நான் அங்கிருந்தேன்..
அண்ணன் அவர்கள் கலந்து கொண்ட விவாதம் முடிந்தவுடன் அவர் சற்று சோர்வாக காணப்பட்டார். அவரை நெறியாளர் உட்பட பல சூழ்ந்து கொண்டார்கள் ஏதோ பிரச்சனை என்று தெரிந்து கொண்டு மேடையை நோக்கி உடனே ஓடினேன். பல்சை பார்த்தேன் சற்று கவலை அடிக்க கூடியதாக இருந்தது. உடனே தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க கூடிய முதலுதவியை செய்ய ஆரம்பித்து விட்டு அவரை ஆசுவாசப்படுத்தினேன். பலர் உதவினார்கள் சில பேர் காற்று வீசினார்கள். சில பேர் சர்க்கரை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்கள். சில பேர் தண்ணி கொண்டு வந்தார்கள் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி..
தீவிரம் என்பதை உணர்ந்த தமிழிசை
சர்க்கரை குறைந்திருக்குமோ என்று நினைத்து சில பேர் அவருக்கு சர்க்கரை கொடுத்தார்கள். ஆனால் நிலைமை அதைவிட தீவிரம் என்பதை உணர்ந்து கொண்டேன் என் உடன் நம் செய்தி தொடர்பாளர் தம்பி பிரசாத் அவர்கள் வந்திருந்தார்கள். உடனே வீல் சேர் கொண்டு வரச் சொல்லி அவரோடு அனுப்பிவிட்டு அடுத்த அமர்விற்குப் பின் அவசர அவசரமாக அவர் அனுமதிக்கப்பட்ட.. பாலாஜி மருத்துவமனை நோக்கி சென்றேன்.
ஸ்கேன்
அப்பொழுது அங்கே ஸ்கேன் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று ஸ்கேன் பதிவை பார்த்தேன். கவலை அளிக்க கூடிய சில பிரச்சனைகள் இருந்ததால் அங்கு உள்ள மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து சில மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வதற்கு விவாதித்து முடிவெடுத்தோம்..
அவசரம் அவசரம்
அப்பொழுது அவர் குடும்ப உறுப்பினரை தொடர்பு கொண்டேன். குடும்ப உறுப்பினரின் தேர்வு அப்போலோ மருத்துவமனையாக இருந்தது... அவசரமாக அவசர சிகிச்சைக்கு மாற்ற இருந்த வரை மருத்துவ உதவியோடு ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு
ஆம்புலன்ஸிலேயே அத்தனை வசதிகளும் செய்து தம்பி
@ANSPRASADBJP ஆம்புலன்ஸிலும் நான் பின்னால் சென்று காரிலும் சென்றோம்... செல்லும் பொழுது அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு தயாராக இருக்க வேண்டிய அத்தனை ஏற்பாடும் செய்து கொண்டே தான் சென்றோம் அதனால் அங்கு அவர் சென்ற உடனே சிகிச்சை அளிக்க உதவியாக இருந்தது மருத்துவர் என்ற முறையில் அங்கே உள்ள மருத்துவர்கள் என்னென்ன அறிகுறிகள் இருந்தது என்று கேட்டார்கள் ஆரம்ப அறிகுறிகளை நான் சொன்னது அவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு பேர் உதவியாக இருந்தது...
தமிழிசை நன்றி
அதற்காக நான் ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன்.. பின்பு அப்பல்லோவில் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது செய்தி அறிந்த உடனே கட்சியின் மாநில தலைவர்
@NainarBJP ,
@KesavaVinayakan,
@MenonArvindBJP உட்பட எல்லோரும் வந்து அக்கறையோடு விசாரித்து உடன் இருந்தார்கள்.
@ReddySudhakar21 தொலைபேசியில் விசாரித்தார்.. ஆனால் அது அவர்கள் பதிவிடவில்லை...
பின்பும் சிகிச்சை அளிப்பதை தொடர்ந்து நான் அங்கே வரவேற்புரையிலேயே அமர்ந்து காத்திருந்து அவர் ஓரளவிற்கு தேறிவருகிறார் வருகிறார் என்று தெரிந்த பின்பு தான் நான் வீட்டிற்க்கே வந்தேன்.. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு..stroke வந்தால் முதலில் செய்யும் முதல் உதவி தான் மிக மிக முக்கியம் அதற்கு நம்மால் பங்கெடுக்க முடிந்தது என்ற வகையில் இறைவனுக்கு எனது நன்றியை தெரிவித்தேன்..
வேதனை
இது மருத்துவ உதவி என்பதனாலும் அண்ணன் ராஜா அவர்களோடு நெடுநாள் கட்சியில் ஒரு சகோதரியாக பழகிய வகையிலும் இதை பதிவிட வேண்டாம் என்று நினைத்து இருந்தேன். முதல் உதவி செய்யும் பொழுது பலர் உடன் இருந்தார்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்ற அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் சிலர் தாங்கள்தான் அவரது சிகிச்சைக்கு காரணம் என்று பதிவிடுவது மட்டுமல்லாமல் உண்மைக்கு புறம்பாக சில கருத்துக்களை சிலர் குறிப்பாக திமுகவைச் சார்ந்தவர்கள் பதிவிடும் பொழுது மன வேதனை அடைகிறேன்..
மனிதநேயம்
அதனாலேயே இதை பதிவிடுகிறேன் தயவு செய்து அரசியல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம் ஒருவரின் உடல் நிலையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று மிக மிக தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.. அதுவும் மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டிய இந்த நிகழ்வில் திமுக
@arivalayam சார்ந்தவர்கள் மதத்தை புகுத்தி பதிவிடுகிறார்கள் என்பது அதைவிட மிகுந்த வேதனை...
அண்ணன் ராஜா அவர்கள் விரைவில் குணமடைந்து எப்பொழுதும் போல அவரது சுறுசுறுப்பான அரசியலை காண காத்திருக்கிறேன்... இறைவனை பிரார்த்திக்கிறேன்... இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications