அங்க டெல்லி பத்தி எரிஞ்சிட்டிருக்கு.. இங்கிட்டு கதை சொல்ல கிளம்பிட்டாரே எச். ராஜா.. செம!
Recommended Video
சென்னை: டெல்லியில் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அதுகுறித்து கருத்து எதையும் தெரிவிக்காமல் கும்பகோணம் கும்பாபிஷேகம் குறித்து எச் ராஜா கதை சொல்லி வருவது கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பாஜக தலைமையை காட்டிலும் படுவேகமாக ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருந்து பாஜகவுக்கு சாதகமான மற்ற கட்சிகளுக்கு பாதகமான விஷயங்களை உடனுக்குடன் ஷேர் செய்து அதற்கு நெட்டிசன்களிடம் இருந்து பாராட்டுகளையும் கொட்டுகளையும் வாங்கி கொள்வார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், அதற்கு முன்னர் நடந்த மாநில சட்டசபை தேர்தலிலும் பாஜக வெற்றி குறித்து பேசி கொண்டிருப்பார்.

தேர்தல் முடிவுகள்
இன்றைய தினம் டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. ஆனால் எச் ராஜாவோ தான் வேறு ஒரு தீவை சேர்ந்தவர் போல் சைலன்ட்டாக உள்ளார். யாராவது அமைதியாக இருந்தாலும் அவர்களை சீண்டி வம்பிழுக்கும் பழக்கம் கொண்ட ராஜா ட்விட்டரில் என்ன செய்கிறார் என தெரிந்தால் ஆச்சரியமடைவீர்கள்.

ஆன்மீக சொற்பொழிவு
எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மதிப்பது ஒரு பண்பு... எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்! கும்பகோணத்தில் 1933 ஆம் ஆண்டு மகாமகப் பெருவிழா நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள மகாப்பெரியவர் காஞ்சியிலிருந்து திருப்பனந்தாள் வழியாக யாத்திரை மேற்கொண்டார் என ஆன்மீக சொற்பொழிவு போல் 4 ட்வீட்டுகளை பதிவிட்டுள்ளார்.

ஓக்லா தொகுதி
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. ஊடக விவாதங்களில் வரும் பாஜக பிரமுகர்கள் கூட கடந்த முறை பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறையோ 15 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் ஷாகீன்பாக் உள்ள ஓக்லா தொகுதியில் பாஜக கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.
Delhi தேர்தல் நிலவரம் ஆம் ஆத்மி முன்னிலை
— kamalesan (@lawraaaa) February 11, 2020
ஆம் ஆத்மி
இதனால் பாஜகவை டெல்லியில் ஆதரவு பெருகி வருகிறது என கூறிவருகிறார்கள். சைலண்ட்டாக உள்ள ராஜாவை அவரது ட்வீட்டில் சிலர் வம்பிழுத்துள்ளனர்.
Delhi தேர்தல் நிலவரம் ஆம் ஆத்மி முன்னிலை
டெல்லியில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. அது குறித்து எதையும் பேசாமல் இருக்கிறீர்களே என கேட்டுள்ளார் இந்த வலைஞர்.
|
கிண்டல்
இனி ஒரு மாதத்திற்கு பக்தி மாலை தான் போல......... இருக்கு. டெல்லி குறித்து எச் ராஜா வாய் திறக்கும் வரை நெட்டிசன்கள் விடுவதாக இல்லை போலும்!. இந்த ட்வீட்டுகள் அட்மினால் பதிவு செய்யப்பட்டது என எச் ராஜா அந்தர் பல்டி அடிக்காமல் இருந்தால் சரி!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications