விடாமல் தொடரும் தோல்வி.. 20 ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்குடியில் நின்று.. மீண்டும் எச். ராஜா வீழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக மூத்த தலைவர் எச் ராஜா காரைக்குடி சட்டசபைத் தொகுதியில் தோல்வி அடைந்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு எம்எல்ஏவாவார் என தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில் ராஜாவுக்கு தோல்வி கிடைத்துள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் வாக்குச் சாவடிகளில் செலுத்திய வாக்குகள் எண்ணப்பட்டன.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் காரைக்குடி தொகுதியில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் தேசிய குழு உறுப்பினருமான எச் ராஜா போட்டியிட்டார்.

முன்னிலை

முன்னிலை

இந்த நிலையில் காலையில் தபால் வாக்குகள் எண்ணும் போது ஓரிரு முறை முன்னிலை வகித்து வந்தார் எச் ராஜா. இதையடுத்து நிலைமை தலைகீழானது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாங்குடி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

வாக்கு வித்தியாசம்

வாக்கு வித்தியாசம்

அனைத்து சுற்று வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் எச் ராஜா 21,485 வாக்குகள் வித்தியாசத்தில் மாங்குடியிடம் தோல்வி அடைந்தார். சாரணர் சாரணியர் தேர்தல் தொடங்கி அண்மையில் நடந்த தேர்தல்களில் மூத்த தலைவரான எச் ராஜா தோல்வி அடைந்து வருவது அவரது ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேட்பாளர்

வேட்பாளர்

1999ஆம் ஆண்டு சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட எச் ராஜா தோல்வி அடைந்தார். பின்னர் 2001-ஆம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தமிழக தேர்தலை சந்தித்தது. அப்போது 21 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றது. அதில் காரைக்குடி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட எச் ராஜா போட்டியிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) வேட்பாளர் உடையப்பனை விட 1,651 வாக்குகள் பெற்று வென்றார்.

திநகர்

திநகர்

அது போல் மயிலாடுதுறையில் ஜெக வீரபாண்டியனும் மயிலாப்பூரில் கே என் லட்சுமணனும் தளியில் கே வி முரளிதரனும் வென்றனர். இந்தத் தேர்தல் வெற்றிக்கு பிறகு 2006 ஆலந்தூர் சட்டசபை தொகுதி, 2014 சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி, 2016 இல் திநகர் சட்டசபை தொகுதி ஆகியவற்றில் போட்டியிட்ட ராஜா வெல்லவில்லை.

ராஜா

ராஜா

2017 ஆம் ஆண்டு தமிழக அரசின் சாரண சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெறும் 52 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியடைந்தார். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளரிடமே தோல்வி அடைந்துள்ளார். இது ராஜாவின் ஆதரவாளர்களை கவலையடையச் செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+