தலையில் கிரீடம்.. சால்வையுடன் வாழ்த்துக்கள்.. தமிழக பாஜக தலைவரா எச்.ராஜா?
சென்னை: தமிழக பாஜக தலைவராக எச்.ராஜா அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதுபோல, அந்த கட்சியின் மற்றொரு மூத்த நிர்வாகி எஸ்.வி.சேகர் வெளியிட்ட ட்வீட்டால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அன்று முதல் இன்று வரை, அதாவது நான்கரை மாதங்களாக, தமிழக பாஜக தலைவர் பதவியைக் காலியாகவே இருக்கிறது.

பாஜக தலைவர்
அவர் வருவாரா, இவர் வருவாரா என்றெல்லாம் பல்வேறு யூகங்கள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் இதுவரை யாரையுமே பாஜக மேலிடம் இந்த பதவிக்கு நியமிக்கவில்லை.

புதிய தலைவர்
இந்த நிலையில்தான், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, தை மாதத்தில் கண்டிப்பாக தமிழக பாஜகவுக்கு தலைவர் நியமிக்கப்படுவார், என்று தீவிரமாக செய்திகள் பரவி வருகின்றன. பொங்கல் தினத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

மூத்த தலைவர்கள்
தமிழக பாஜக தலைவர் பதவிக்கு எச்.ராஜா, வானதி சீனிவாசன், எஸ்வி சேகர் போன்ற பல்வேறு மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் எஸ்.வி.சேகர் நேற்று தனது ட்விட்டர் கணக்கில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.
|
கிரீடம்
அதில், ராஜாவுக்கு சால்வை அணிவித்து, தான் பக்கத்தில் நிற்க கூடிய புகைப்படத்தை அவர் ஷேர் செய்துள்ளார். மேலும், போட்டோஷாப் மூலமாக ராஜா தலையில் கிரீடம் வைக்கப்பட்டு உள்ளது. வாழ்த்துக்கள் என்றும் எழுதியுள்ளார் எஸ்.வி.சேகர்.
|
நியமனம்
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, தமிழக பாஜக தலைவராக ராஜா நியமிக்கப்பட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. இந்த ட்வீட்டை கீழே கருத்து தெரிவித்துள்ள பல நெட்டிசன்கள் ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications