என்னாது.. லோக்சபா தேர்தலில் எச். ராஜா போட்டியிடலையா.. அதிர்ச்சியா இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பாஜக கூட்டணி ஓகே. ஆனால் அதில் ஒரு முக்கியமான மேட்டர் மறைந்திருக்கு. சோகக் கதையும் கூட.. அதாவது எச். ராஜாவுக்கு இந்த தேர்தலில் சீட் கிடையாதாம்.

ஒரு வழியாக அதிமுக பாஜக கூட்டணி அமைந்து விட்டது. பாஜகவுக்கு 8 தொகுதிகள் 10 தொகுதிகள் என்றெல்லாம் பேசப்பட்டு வந்த நிலையில் கடைசியாக 5 தொகுதிகளை கொடுத்து பாஜகாவை ஓரங்கட்டி விட்டது அதிமுக. கூட்டணி அமைந்ததும் பாஜக தரப்பில் யார் யார் எந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்ற தகவல்கள் கூட பாஜக கூடாரத்தில் இருந்து கசிந்தது.

கன்னியாகுமரி தொகுதியில் வழக்கம்போல பொன்.ராதாவும், நெல்லை தொகுதியில் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற நயினார் நாகேந்திரனும், திருப்பூர் தொகுதியில் வானதி சீனிவாசனும், திருச்சியில் தமிழிசையும், சிவகங்கையில் பாஜக ஹீரோ ஹெச் ராஜாவும் போட்டியிடுவார்கள் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது.

மகிழ்ச்சி இல்லை

மகிழ்ச்சி இல்லை

இந்நிலையில் நேற்று கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்து பாஜக தரப்பும் அதிமுக தரப்பும் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாஜக தரப்பில் யார் முகத்திலும் மகிழ்ச்சியை காண முடியவில்லை என்று பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவருமே பேசிக்கொண்டனர். பாஜக தரப்பில் அங்கு நின்றவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைத்தான் காண முடியவில்லை என்றால் அந்த ஏரியா பக்கமே நம்ம பாஜக ஹீரோ ஹெச் ராஜாவையே காணவில்லை. எந்த வம்பு தும்பாக இருந்தாலும் வாலண்டியராக வந்து வண்டியில் ஏறுவாரே என்னாயிற்று ஹெச் ராஜாவுக்கு என்று விசாரித்தபோது சில பல தகவல்கள் நமக்கு கிடைத்தன.

பாஜக கூட்டணி வேண்டாம்

பாஜக கூட்டணி வேண்டாம்

பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பியபோதே கூட்டணி வேண்டாம், வேண்டும் என்று இரு வேறு கருத்துகள் இருந்தன. அதன் பின்னர் பாஜக தரப்பில் இருந்து கூற வேண்டிய விதத்தில் கூறிய பிறகு அதிமுக தரப்பினர் கூட்டணிக்கு ஒத்துக் கொண்டுள்ளனர். ஆனால் ஹெச் ராஜா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று ஒரு கண்டிசன் போட்டுள்ளனர்.

ராஜா போட்டியிடக் கூடாது

ராஜா போட்டியிடக் கூடாது

ஏற்கனவே தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் செல்வாக்கு, அதையும் தாண்டி புனிதமாக இருக்கும் ஹெச் ராஜாவுக்கு இருக்கும் செல்வாக்கு, நீதிமன்றம் குறித்து ஹெச் ராஜா பேசியது, பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து பேசியது, சாரணர் இயக்கத்தில் கிடைத்த வெற்றிகரமான தோல்வி என்றெல்லாம் அவரின் புகழுக்கு காரணமானவற்றை அடுக்கியுள்ளனர்.

மாநிலங்களவை உறுப்பினர்

மாநிலங்களவை உறுப்பினர்

இதையெல்லாம் ஏற்றுக் கொண்ட பாஜக தலைமை ராஜாவுக்கு வேறு பொறுப்புகள் கொடுக்கலாம் அதோடு மாநிலங்களவை உறுப்பினர் கொடுக்கலாம் என்று கூறியிருக்கிறதாம். இதனால் கோபமும் ரோஷமும் கொண்ட ஹெச் ராஜா கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெறும் இடத்திற்கு எட்டியே பார்க்கவில்லையாம். என்னடா இது ஹெச்.ராஜாவுக்கு வந்த சோதனை என்று புலம்புகிறார்களாம் அவரது அபிமானிகள்.?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+