விதை நான் போட்டது.. ’ஜோசப் விஜய்’னு சொன்னதே நான் தான்! எச்.ராஜாவின் ’உண்மை கசக்கும்’ ஃப்ளாஷ்பேக்!
சென்னை: தமிழ் திரை உலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டு காலமாக விஜய் என அடையாளப்படுத்தி வந்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் தற்போது ஜோசப் விஜய் என தன் பெயரை கூறி வருகிறார். இந்த நிலையில் விஜய் ஜோசப் விஜய் என முதன் முதலில் அவரை அடையாளப்படுத்தியது தான் தான் எனக் கூறியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா.
தமிழக முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில் தற்போது பூஜிக்கப்பட்ட சிலைகள் நீர் நிலைகளில் விஜர்சனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை பல்வேறு அமைப்புகளின் சார்பில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர்," தமிழகத்தில் தற்போது இந்துக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது கிறிஸ்தவ மிஷனரிகள் திட்டமிட்டு மத துவேஷத்தை பரப்பி வருகின்றனர். அதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் உடந்தையாக இருக்கிறார். விஜய் எனவே தன்னை அடையாளப்படுத்தி வந்த அவரை ஜோசப் விஜய் என முதன் முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியதை நான்தான் என பேசி இருக்கிறார்.
தற்போது அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம்..
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய். அதற்கு முன் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். தொடர்ந்து அவரது பல படங்கள் தோல்வியை தந்த நிலையில் பூவே உனக்காக திரைப்படம் அவரது திரை வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அதற்குப் பிறகு குடும்ப பாங்கான படங்களில் விஜய் நடிக்க தொடங்கியதோடு ஆக்சன் அவதாரமும் எடுத்தார்.
அப்போது இருந்து 'இளைய தளபதி' என அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றன. சினிமா வாழ்வின் பிற்பகுதியில் இளைய தளபதி என்பதிலிருந்து தளபதி என தனது பட்டத்தை மாற்றிக் கொண்டார் விஜய். சினிமா துறையில் இருப்பது வரை தன்னை விஜய் என்று அடையாளப்படுத்தி வந்தார்.
இந்நிலையில், 2017ல் தான் ஜோசப் விஜய் என்ற அவரது பெயர் சமூக வலைதளங்களில் அடிபடத் தொடங்கியது. இதற்கு விதை போட்டவர் பாஜகவின் எச்.ராஜா அப்போது மெர்சல் படம் வெளியாகி இருந்த நிலையில் ஜிஎஸ்டி குறித்து விஜய் பேசி இருந்தார்.
அதாவது குறைந்தபட்ச ஜிஎஸ்டி வாங்கும் மலேசியாவில் இலவச மருத்துவம் தரப்படும் நிலையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் இந்தியாவில் ஏன் மருத்துவ இலவச மருத்துவம் இல்லை என விஜய் அந்படத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அப்போது இருந்து விஜய்யை பாஜக அடித்து துவைக்க துவங்கியது. எல்லாவற்றையும் விட விஜயின் வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

அதில் ஜோசப் விஜய் என பெயர் இருப்பதை குறிப்பிட்டு 'உண்மை கசக்கும்' எனக் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பெரிதான நிலையில் முதன்முறையாக பொதுவெளியில் ஜோசப் விஜய் என்ற லெட்டர் பேடுடன் அறிக்கை வெளியிட்டார் விஜய். ஆனாலும், அதற்கு பிறகும் திரைப்படங்களில் தளபதி விஜய் என்று குறிப்பிட்டு வந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய போதும், முதல்வராகி இருக்கும் போதும் தனது பெயரை ஜோசப் விஜய் என்றே குறிப்பிட்டு வருகிறார்.இதை குறிப்பிட்டு தான் எச். ராஜா தற்போது பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
