பொட்டு வைக்கக் கூடாதா? திமுக முஸ்லீம்கள் தொப்பி போடக் கூடாதுனு சொல்வீங்களா? ராசாவை கேட்கும் ராஜா.!
சென்னை: திமுகவினர் பொட்டு வைத்து கையில் கயிறு கட்டும்போது யார் சங்கி? யார் திமுக காரன்? என வித்தியாசம் தெரியவில்லை. எனவே திமுக வேட்டி கட்டும்போது பொட்டு வைக்காதீர்கள் என திமுக எம்பி ஆ.ராசா பேசியது சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் திமுகவில் இருக்கும் இஸ்லாமியர்கள் தொப்பி அணியாதீர்கள்.. தாடி வைக்காதீர்கள் என்று ஆ ராசா சொல்வாரா? என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மூத்த தலைவரான எச். ராஜா.
நீலகிரியில் திமுக மாணவரணி சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளர் நீலகிரி எம்பியுமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசி அவர் கடவுள் தேவைப்படுவோர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் திமுகவினர் பொட்டு வைத்து கையில் கயிறு கட்டுகிறார்கள்.
இதனால் சங்கி யார் திமுக காரன் யார் என தெரியவில்லை. ஆனால் திமுக வேட்டி கட்டும் போது பொட்டு வைக்காதீங்க என பேசி இருந்தார். ஆ.ராசா பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் கடும் சர்ச்சை எழுந்தது. பிறரின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவது போல ஆ.ராசா பேசுவதாக சிலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் திமுகவில் இருக்கும் இஸ்லாமியர்கள் தொப்பி அணியாதீர்கள்.. தாடி வைக்காதீர்கள் என்று ஆ ராசா சொல்வாரா? என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மூத்த தலைவரான எச். ராஜா. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"திமுக ஒரு இந்து விரோத நச்சுப் பாம்பு!! திமுக கரை வேட்டி கட்டுபவர்கள் பொட்டு வைக்க வேண்டாம். கையில் கயிறு கட்ட வேண்டாம் என்று திமுகவில் உள்ள இந்துக்களிடம் சொல்லும் ஆ.ராசா அவர்களுக்கு..?
நெற்றியில் பொட்டு வைத்து கையில் கயிறு கட்டும் பழக்கமுள்ள இந்துக்கள் யாரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று ஒட்டுமொத்த இந்துக்களிடமும் சொல்லும் தைரியமும், திராணியும் இருக்கிறதா? திமுகவில் இருக்கும் இஸ்லாமியர்கள் மசூதிக்கு செல்லுங்கள் ஆனால் தொப்பி அணியாதீர்கள், தாடி வைக்காதீர்கள் என்று ஆ.ராசா சொல்வாரா? திமுகவில் இருக்கும் கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்கு செல்லுங்கள் ஆனால் கழுத்தில் சிலுவை அணியாதீர்கள் என்று ஆ.ராசா சொல்வாரா?
என்ன ஒரு அபத்தமான பேச்சு? இந்துக்களின் வாக்குகள் மட்டும் திமுகவுக்கு வேண்டும்? ஆனால் இந்துக்களின் சமய அடையாளங்கள் மற்றும் சம்பிரதாய சடங்குகள் மட்டும் வேண்டாமா? திமுகவுக்கு தைரியமும், திராணியும் இருக்குமானால் இறை நம்பிக்கையுள்ள இந்துக்கள் எவரும் 2026 தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்கத் தேவையில்லை. இறை நம்பிக்கையற்ற நாத்திக சிந்தனை உள்ளவர்கள், ஈவெராவின் கொள்கைகளை ஏற்பவர்கள் மட்டுமே திமுகவுக்கு வாக்களித்தால் போதும் என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா திரு. M. K. Stalin அவர்களே?
டெங்கு மலேரியா கொசுக்களை அழிப்பது போல சனாதனத்தை பின்பற்றுபவர்களை அழிப்பேன் என்று பேசியவர் தானே திமுகவை சேர்ந்த துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின். திமுக இந்துக்களை அழிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது. இந்து விரோத திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணமிது அது காலத்தின் கட்டாயம் என்பதை இந்துக்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்."என கூறியுள்ளார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications