"சரக்கு மிடுக்கு".. ஸ்டாலின் ஏன் "அவர்" கிட்ட உட்கார்றார்.. திருமாவை உள்ளே வைக்கணும்: யார்னு பாருங்க

எச் ராஜா சீமானையும், திருமாவளவனையும் ஸ்டாலினையும் விமர்சித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "திருமாவளவன், சீமானை பிடித்து எப்பவோ உள்ளே போட்டிருக்க வேண்டும், ஆனால், முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் லாயக்கற்றவர்" என்று பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மறுபடியும் கொந்தளித்துள்ளார்.. திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருமாவளவன் என்றாலே உடனடியாக தன்னுடைய கருத்தினை, அதாவது எதிர்ப்பினை, முதலில் வந்து பதிவு செய்பவர் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா என்பதை மறுக்க முடியாது.

அந்த வகையில், திருமாவளவனை விமர்சித்து எச்.ராஜா தரும் பேட்டியாகட்டும்.. ட்வீட் ஆகட்டும், அது சோஷியல் மீடியாவில் மிகுந்த கவனத்தை பெற்றுவிடும்.

"சரக்கு மிடுக்கு"

ஒருமுறை எச்.ராஜா, "இவர் என்ன சாதாரண நபரா? சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர். டில்லியில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்று பேசிய மாவீரர். எல்லாம் தமிழகத்தின் தலைவிதி" பதிவிட்டிருந்த ட்வீட்டானது, தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது.. சரக்கு மிடுக்கு என்ற வார்த்தையை, விசிகவினரே பெருமிதமாக பதிவிடும் அளவுக்கு அந்த ட்வீட் அப்போது வைரலானது.. மனுஸ்மிருதி விவகாரம் முதல் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை என்பது வரை, விசிகவின் செயல்பாடுகளை பாஜகவும், அக்கட்சி தலைவர்களும் விமர்சித்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

 திருமா திருமாவளவன்

திருமா திருமாவளவன்

அதனால்தான், விசிகவை தடை செய்ய வேண்டும் என்று இதற்கு முன்பே பலமுறை வெளிப்படையான கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.. கோவை வெடிகுண்டு விபத்து விவகாரத்திலும் விசிக மீது இதே வேண்டுகோளை வைத்திருந்தது தமிழக பாஜக.. "திருமாவளவன் இந்த நாட்டின் தீய சக்தி" என்று எச்.ராஜா விமர்சித்திருந்தார்.. பெட்ரோல் குண்டு வீசியவர்கள் பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ் தான் உள்ளனர் என்று திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், எச்.ராஜா பதிலுக்கு திருமாவளவனை சாடியிருந்தார்.

 எந்த ஜென்மங்களோ

எந்த ஜென்மங்களோ

"இந்த திருமாவளவன், சீமான் எந்த ஜென்மங்களோ தெரியவில்லை.. ஆனால் அவர்கள் தேச விரோதிகள்.. கோவையில் போலீஸ் ஸ்டேஷன் முன்பாகவே, எஸ்டிபிஐ, பிஎப்ஐ போராட்டம் நடத்துகிறார்கள் என்றால், இவர்களுக்கு உறுதுணையாக இருப்பது திருமாவளவன்தான்.. விசிகவுக்கும், எஸ்டிபிஐ க்கும் வித்தியாசம் இல்லை, அதனால், தமிழக அரசு, உடனடியாக விசிக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நாட்டுக்கு விரோதமான காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவரை கூட்டிவந்து கூட்டம் நடத்தியவர் சீமான்.. அதனால், சீமான், திருமாவளவன் இவர்கள் 2 பேரையுமே உடனே கைது செய்ய வேண்டும் என்று எச்.ராஜா அப்போது கேட்டுக் கொண்டிருந்தார்.

 லாயக்கில்லை

லாயக்கில்லை

இப்போது மறுபடியும் இதே குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.. "திருமாவளவன், சீமானை பிடித்து உள்ளே போட்டிருக்க வேண்டும், ஆனால், முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் லாயக்கற்றவர்" என்று எச்.ராஜா இந்த முறை ஸ்டாலினையும் சேர்த்தே விமர்சித்துள்ளார்.. தென்காசி நகர இந்து முன்னணி பிரமுகர் குமார்பாண்டியனின் 16-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற்றார்.அப்போது அவர் சொன்னதாவது:

 திருமா சீமான்

திருமா சீமான்

"முதல்வர் பதவிக்கு லாயக்கற்றவர் முக ஸ்டாலின்... தேசபக்தி அமைப்பு ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கொடுங்கள், தேசத்துரோகி திருமாவளவன், சீமானை பிடித்து உள்ளே போடுங்கள் என்று அப்போதே உத்தரவிட்டிருந்தால், அவர் முதலமைச்சராக இருப்பதற்கு தகுதியானவர்.. ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை... திருமாவளவன், ஸ்டாலின் பக்கத்தில் உட்கார்ந்தால், ஸ்டாலினும் குற்றவாளி ஆவார்.. ஒன்றிய அரசு என்று பேசுபவர்கள் எல்லாருமே தேசத் துரோகிகள்தான்.. மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிடும் ஐஏஎஸ் அதிகாரிகளை, உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத்தின் புல்டோசர் முன் நிறுத்த வேண்டும்.

தமிழ்தேசியம்

தமிழ்தேசியம்

தடை செய்யப்பட்ட பிஎஃஐ அமைப்புக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மனிதச்சங்கிலி நடைபெற்றது. தமிழக போலீஸ், தேசவிரோத, பிரிவினைவாத, தீயசக்திகளின் கூட்டாளிகள் என்பதற்கு இது உதாரணம்... தமிழ் தேசியம் என்று சொல்பவர்கள் தேசத்துரோகிகள். குடியரசு தின ஊர்வலத்தில் பங்குகொள்ள நேருவால் அழைக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி அளிக்கவில்லை. தேசபக்தியோடும் முதுகெலும்போடும் இருந்த 3 மாவட்ட எஸ்பிக்கள் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கொடுத்தது பாராட்டுக்குரியது..

 முதுகெலும்புகள்

முதுகெலும்புகள்

காவல்துறையை கலைத்துவிட்டால் அவர்களுக்கு கொடுக்கும் சம்பளமாவது மிச்சமாகும்... இந்த டிசம்பர் மாதம் முடிவதற்குள் தென்காசியில் நடந்த 4 கொலை குற்றவாளிகளை கைது செய்தால், தமிழ்நாடு டிஜிபி பற்றி விமர்சனம் செய்ததற்கு, ஜனவரி 1-ம் தேதி நான் மன்னிப்பு கேட்பேன். அவர் சைக்கிளில் போறார்.. செல்ஃபி எடுத்துக்கறார்.. அதையெல்லாம் போஸ்ட் போட்டுக்கறார்.. அவ்வளவுதான் அவருக்கு அதிகாரம் உள்ளது" என்றார் எச்.ராஜா.. இந்த பேட்டியை தொடர்ந்து, விசிக, திக, திமுக, நாம் தமிழர் என எல்லாரும் ஒன்றுதிரண்டு தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+