Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மநீம.. கமல் மீது எச் ராஜா சரமாரி பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்

    சென்னை: இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கூறிய நடிகர் கமல்ஹாசனுக்கு எச் ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அரவக்குறிச்சிக்கு வரும் மே 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அந்த தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

    அப்போது பேசிய அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என்றார். கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்துள்ளது.

    விமர்சனம்

    விமர்சனம்

    கமலின் பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் கூறியிருப்பதாவது,

    வெட்கம்

    கமல்ஹாசனை அடையாளம் காண்போம். பல்லாயிரக்கணக்கான இந்துக்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு ரயிலில் இந்து உடல்களை ஜின்னா 1947 ஆகஸ்டு 15 அன்றே அனுப்பி வைத்ததும் நவகாளி சம்பவங்களும் இந்த ஜின்னாவின் பேரனுக்கு எப்படி நினைவிருக்கும். முஸ்லிம் ஓட்டுக்காக இப்படியா? வெட்கம்

    கோழை

    முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மநீம. முஸ்லிம் ஓட்டுக்காக இந்துக்களை இழிவு படுத்தும் செயலைப் பாருங்கள். திருப்புவனம் இராமலிங்கத்தின் படுகொலையை கண்டிக்காத கோழை.

    மறக்க முடியவில்லை

    திரு. அநாமதேயம் ( Anonymous one) கமலஹாசன் நான் தூக்கம் இழக்கும் அளவிற்கு பெரிய சக்தி அல்ல. இவரால் 1% வாக்குகள் கூட வாங்க முடியாது. ஆனால் விஸ்வரூபம் படத்திற்கு இவர் பயங்ரவாதிகள் முன் கேவலம் பணத்திற்காக மண்டியிட்டதை மறக்க முடியவில்லை

    போரட்டம் நடத்தியவன்

    அரவக்குறிச்சியில் பணக்கார முஸ்லிம் பெண்கள் மாலை 6மணிக்குமேல் ஷாப்பிங் வருவார்கள் என்று மாலையில் இந்து ஆண்கள் கடைத்தெருவில் நடமாடக்கூடாது என்ற ஜமாஅத் உத்தரவை எதிர்த்து 1999ல் அரவக்குறிச்சியில் போராட்டம் நடத்தியவன் நான். ஆனால் ஓட்டுக்காக அங்கு சென்றுள்ள கமலுக்கு அது எப்படி தெரியும். இவ்வாறு எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+