ஸ்டாலின் மாதிரி மோசமான நபரை நான் பார்த்ததே இல்லை.. கலாச்சாரத்துக்கு இவர் எதிரி.. எச். ராஜா கோபம்
முக ஸ்டாலின் இந்த மண்ணுக்கு எதிரி என்று எச்ராஜா கூறியுள்ளார்
Recommended Video
சென்னை: "உங்களுக்கு எல்லாம் என்னடா இருக்குது? மானங்கெட்ட பயலுகளா.. ஸ்டாலின் மாதிரி மோசமான நபரை நான் பார்த்ததே இல்லை.. இந்து மதம்-ன்னா என்ன வேணும்னாலும் பேசலாமா? திமுக இப்போது திகவாகவும், முஸ்லீம் லீக் ஆகவும் மாறிவிட்டது... ஸ்டாலின் இந்த நாட்டின் கலாச்சாரம் தொன்மை ஆகியவற்றை நீங்கள் கொச்சைப் படுத்தினாலோ, கேள்வி எழுப்பினாலோ அதற்கான விளைவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா காட்டமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 5 அதாவது நாளை, குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.. இதற்கான ஏற்பாடுகளும் மிக தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த குடமுழுக்கு நிகழ்ச்சியை தமிழில் நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வேண்டுகோளுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் சொன்னதாவது:

குரான்
"ஸ்டாலின் மாதிரி ஒரு மோசமான நபரை நான் பார்த்ததே இல்லை. அவர் இந்த மண்ணுக்கு எதிரி, இந்த மண்ணின் கலாச்சாரத்திற்கு எதிரி, பண்பாட்டுக்கு எதிரி. ஏன்னு சொன்னா, குரான் எந்த மொழியில் ஓதறாங்க.. அரபு மொழியில்.. நாம அதை ஒன்னும் குறை சொல்லல. ஏன்னா, மதம் வேற, மொழி வேறு. இங்க இருக்கிற முஸ்லீம்கள் தமிழர்கள்.. ஆனால் ஓதறது அரபு மொழியில்.. அதை யாருமே தடுக்கலையே.
|
குடமுழுக்கு
இந்து மதத்துல மட்டும் வேதங்கள், ஆகமங்கள்ன்னு ஏன் பிரிக்கறீங்க? தமிழ்நாட்டுல இருக்கிற இந்துக்களுக்கு மதம் இந்து.. மொழி தமிழ்!! குஜராத்தில் இருக்கிற இந்துக்களுக்கு மொழி குஜராத்தி, மதம் இந்து!!! நீங்களே பாருங்க இவங்க எவ்வளவு தூரத்துக்கு இந்து மதத்துக்கு எதிரா பெரிய யுத்தம் நடத்துறாங்கன்னு.. தஞ்சை கோயில்ல குடமுழுக்கு தமிழில் பண்ணணும்னு போராடறது யாரு ஜெய்னுல்லாபுதீனா? இல்லே டேவிட் மணியரசனா?

முஸ்லிம் லீக்
உங்களுக்கெல்லாம் என்னடா இருக்குன்னு கேட்கறேன் நான்.. மானங்கெட்ட பயலுகளா.. இந்து மதம்-ன்னா என்ன வேணும்னாலும் பேசலாமா? தஞ்சையில் குடமுழுக்கு தமிழில் செய்ய வேண்டும் என்று கூற ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது. மதம் வேறு மொழி வேறு. இதில் திமுக உள்ளிட்ட கட்சிகள் தலையிடாமல் இருக்க வேண்டும்.. திமுக இப்போது திகவா மாறி போச்சு.. முஸ்லீம் லீக் ஆகவும் மாறிவிட்டது.

மோசமான விளைவு
அதனால நான் சொல்றேன் ஸ்டாலினுக்கு அநாவசியமா இந்த நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், தொன்மை ஆகியவற்றை நீங்க கொச்சைப்படுத்தினாலோ, கேள்வி எழுப்பினாலோ அதற்கான விளைவை சந்திக்க நேரிடும்" என்றார். இந்த வீடியோ பதிவை எச்.ராஜாவே தன்னுடைய ட்வீட்டில் பதிவிட்டும் உள்ளார். இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் என மாறி மாறி கமெண்ட்கள் வந்தவண்ணம் உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications