யார ராஜினாமா செய்ய சொல்றீங்க.. நீங்க பொறுப்பா செயல்பட்டிங்களா? ஸ்டாலின் மீது பாயும் எச் ராஜா!
Recommended Video
சென்னை: உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது பொறுப்பாக செயல்பட்டீர்களா என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் முழுவம் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீருக்காக மக்கள் குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. காசு கொடுத்தும் தண்ணீர் கிடைக்காததால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

ராஜினாமா செய்ய வேண்டும்
இந்நிலையில் தண்ணீர் பிரச்சனைக்கு தார்மீக பொறுப்பேற்று உள்ளாட்சித் துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

எச் ராஜா பதிலடி
குடிநீர் பிரச்சனையில் அதிமுக அரசு அலட்சியமாக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்டாலினுக்கு எச் ராஜா கேள்வி
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில் தெரிவித்திருப்பதாவது, திமுக ஆட்சியில் இருந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை எத்தனை கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன? என எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
|
நீங்கள் பொறுப்பாக செயல்பட்டீரா?
சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நீங்கள் பொறுப்பாக செயல்பட்டீரா? என்றும் எச் ராஜா ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications