இவரோட சரக்கு, மிடுக்கு பேச்சு.. ஆஹா.. நாகரீகத்தின் உச்சம்.. திருமாவை வறுத்தெடுத்த எச் ராஜா!
Recommended Video
சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக டிவிட் போட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை எச் ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
இந்துக்கள் குறித்த சர்ச்சைப்பேச்சுக்காக நடிகர் கமல்ஹாசன் மீது நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தப்பட்டது. பிரச்சாரத்தில் பங்கேற்ற கமல் மீது, முட்டை, செருப்பு, கற்கள் வீசப்பட்டன.
இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டனம்
கமல்ஹாசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் கமல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.
|
அநாகரீகத்தின் களம்
இதுதொடர்பாக அவர் பதிவிட்ட டிவிட்டில் நடிகர் கமல்ஹாசன் கூட்டத்தில் காலணி, முட்டை வீச்சு என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தமிழக அரசியல் அநாகரீகத்தின் களமாக மாறிவருவது கவலையளிக்கிறது. சங்பரிவார் கும்பலின் கொட்டத்திற்கு அதிமுக அரசே முழு பொறுப்பாகும். இப்போக்கை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
|
நாகரீகத்தின் உச்சம்
இந்நிலையில் திருமாவளவனின் டிவிட்டுக்கு எச் ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்ட டிவிட்டில், ஆமாம் இவர் ரொம்ப நாகரீகமானவர். இவரோட சரக்கு மிடுக்கு பேச்சு ஆஹா நாகரீகத்தின் உச்சம். என பதிவிட்டுள்ளார்.

வைரலான வீடியோ
ஏற்கனவே திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கூட்டத்தில் சரக்கு, மிடுக்கு என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சு வீடியோவும் வைரலானது. இந்நிலையில் அதனை திருமாவளவனை வைத்து வறுத்தெடுத்துள்ளார் எச் ராஜா.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications