“விஜய் பிரிக்கப்போவது எல்லாம் திருமாவளவன் கட்சி வாக்குகளைத்தான்.. NDAவுக்கு பாதிப்பில்லை” - எச்.ராஜா
சென்னை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தவெக விஜய் திருமாவளவன் வாக்குகளை தான் பிரிப்பார் எனக் கூறியுள்ளார். மேலும் விஜய்யின் வருகை திமுகவிற்கு தான் ஆபத்து என்றும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய்யால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக என 4 முனை போட்டி நிலவுகிறது. விஜய் தலைமையிலான தவெகவின் வருகை யாருக்கு பாதிப்பை கொடுக்கும்? திமுகவின் வாக்குகளை பிரிக்குமா? அல்லது அதிமுக வாக்குகளை பிரிக்குமா? எந்த கூட்டணிக்கு தவெக தலைவலியாக அமையும் என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன.

தவெக திமுகவிற்கும் அதிமுகவிற்கும் கடும் சவாலாக இருக்கும் என்பதே கணிப்புகளாக இருந்து வருகிறது. திமுகவினர் தவெக கட்சியால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றே சொல்கின்றனர். அதேபோல அதிமுகவினர் எங்களுக்கும் திமுகவிற்கும் தான் போட்டி எனக் கூறி வருகின்றனர்.
தவெக திமுகவின் வாக்குகளை தான் பிரிக்கும் என அதிமுக கூட்டணியில் இருக்கும் டிடிவி தினகரன் உட்பட சிலர் கூறி வருகின்றனர். அதே கருத்தை தான் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். அதாவது தவெக என்ற கட்சியால் திமுகவிற்கு தான் பாதிப்பு. விஜய் திமுக கூட்டணியின் வாக்குகளை தான் பிரிப்பார். மிகக் குறிப்பாக திருமாவளவன் கட்சி வாக்குகளை தான் விஜய் பிரிப்பார் என எச்.ராஜா கூறியுள்ளார்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய்யால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும், அதே சமயம் விஜய்யின் வருகை முழுக்க முழுக்க திமுகவிற்கு தான் ஆபத்தாக அமையவுள்ளது என்றும் கூறியுள்ளார் எச்.ராஜா.
-
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
விசிகவில் இருந்து சங்கத்தமிழன் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு












Click it and Unblock the Notifications