சாராய பேக்டரி, திராவிடம், ஜோலார்பேட்டை.. அடுத்தடுத்து எச். ராஜா போட்ட டிவீட்.. சலசலக்கும் அரசியல்

திராவிட அரசியல் குறித்து எச்.ராஜா 3 ட்வீட்கள் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அடுத்தடுத்து எச். ராஜா போட்ட டிவீட்.. சலசலக்கும் அரசியல்- வீடியோ

    சென்னை: எச். ராஜா மறுபடியும் ஆரம்பித்து விட்டார். சாராய பேக்டரி.. டாஸ்மாக்.. நவோதாய எதிர்ப்பு என்று ஆரம்பத்து ஜோலார்பேட்டை தண்ணி வரை கொண்டு வந்து முடித்து ட்வீட் போட்டுள்ளார். அடுத்தடுத்து எச்.ராஜா போட்ட 3 ட்வீட்களால் அரசியல் களம் சலசலப்பாகி உள்ளது.

    கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக கட்சிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்புகூட, திமுகவினர், காங்கிரஸ் பிரமுகர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டார் எச் ராஜா.

    H Raja tweet about Diravida Arasiayal

    இங்கெல்லாம் இந்தி கட்டாயம் என்பதையும் அவர் மறக்காமல் அந்த பட்டியலில் சுட்டி காட்டி இருந்தார். மேலும் வெளியில் இந்தி திணிப்பு என்று கூறி விட்டு உள்ளுக்குள் சத்திமில்லாமல் ரகசியமாக இவர்கள் இந்தியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள், இது இரட்டை நிலை இல்லையா என்றும் காட்டமாக கேட்டிருந்தார் எச். ராஜா. இப்போது இதே இந்தி எதிர்ப்பு பிரச்சனையை உள்ளிட்டவை கொண்டு 3 ட்வீட்கள் போட்டுள்ளார்.

    அதில், திராவிட அரசியல்... சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதும், இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்தியை எதிர்ப்பதும், கர்நாடகாவிடமிருந்து தண்ணீர் தரவில்லையென்றால் தமிழ்நாடு தனி நாடு ஆகுமெனச் சொல்லிக்கொண்டே... ஜோலார்பேட்டை தண்ணீர் சென்னைக்கு தரவிடமாட்டோமென்கிறதும், தன்னுடைய பிள்ளைகளை பல லட்சங்களை கட்டி பள்ளிகளில் படிக்க வைத்துக்கொண்டே... அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும், இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே... கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும், லட்சக்கணக்கான கோடிகளை சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு, ஊழலை நடமாட விடமாட்டோமென்பதும் தான் திராவிட அரசியல்!" என்று எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

    டாஸ்மாக், தண்ணீர் பிரச்சனை, நவோதாய, இந்துமத நம்பிக்கை, ஊழல் என ஒட்டுமொத்த வார்த்தைகளையும் வைத்து திராவிட அரசியல் குறித்து ட்வீட் போட்டுள்ளார் எச்.ராஜா. இந்த ட்வீட்டுகளுக்கு கீழே பலவித விமர்சனங்கள், வரவேற்புகள், எதிர்ப்புகள் என கமெண்ட்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன

    "மிஸ்டர் ஹெச்.ராஜா நீங்க சொல்லித்தான் இவ்ளோ நன்மைகளை அவர்கள் செய்வதே தெரிகிறது. உங்கள் வார்த்தைகளில் முரண்பாடுகள் அதிகம் உள்ளன" என்கிறது ஒரு ட்வீட்.

    "இவை அனைத்தும் திராவிட கட்சியான அதிமுக பொருந்தும் அல்லவா" என்று எச்.ராஜாவை பதில் கேள்வி கேட்டுள்ளது இன்னொரு ட்வீட்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+