சூரிய கிரகணம்.. பகுத்தறிவு வியாதி.. முழு இந்து விரோதி.. தி.க மீது ஆவேசமாக பாயும் எச். ராஜா

திராவிடர் கழகம் வெளியிட்ட அறிவிப்பினை எச்.ராஜா விமர்சித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "விஞ்ஞான பூர்வமான எதையும் ஏற்க மறுக்கும் பகுத்தறிவு வியாதி. மாற்று மத நம்பிக்கைகளை இவர் கொச்சை படுத்தியது உண்டா... முழு இந்து விரோதி" என்று திக நடத்தும் நிகழ்ச்சிக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

சூரிய கிரகணம் வந்தாலும் சரி, சந்திர கிரகணம் வந்தாலும்.. என்ன செய்வது, என்ன செய்யக்கூடாது என்ற குழப்பம் நமக்கு வந்துவிடுகிறது.. ஆனால் இவைகளை ஒரு பட்டியலே போட்டு நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள்.. சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, முதல் தூங்கும் நேரம்வரை குறித்து வைத்துள்ளனர்.. அதனை இன்றளவும் பெருமளவு மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

ஆனால், அன்று ஆன்மீகம் சொன்னதை அறிவியலும், புவியியலும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவில்லை.. சூரிய கிரகணம் ஏற்படும்போது வழக்கமான நாட்களைப் போலவே சாப்பிடலாம், வெளியில் போகலாம்.. என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

மூடநம்பிக்கை?

மூடநம்பிக்கை?

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், கிரகணத்தின்போது சாப்பிடக்கூடாது என்ற கருத்தினை உடைக்கும் முயற்சியில் திராவிடர் கழகம் இறங்கியது.. இது சம்பந்தமான ஒரு அறிவிப்பினையும் அக்கழகம் வெளியிட்டுள்ளது.

சூரிய கிரகணம்

"சென்னை பெரியார் திடலில் சூரியகிரகணத்தின்போது உணவருந்தக்கூடாது என்ற மூடநம்பிக்கையை முறியடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.. திக சார்பில் 26-ம்தேதி காலை 8 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் சிற்றுண்டி சாப்பிட்டு, அந்த மூட நம்பிக்கை முறியடிக்கப்படுகிறது.." என்பதே அந்த அறிவிப்பு! இத்துடன் பெரியார் தந்தை போட்டோவும் இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பு

அறிவிப்பு

இந்த அறிவிப்பு ஹெச்.ராஜா கண்ணில் பட்டுள்ளது.. கழகம் சார்பாக வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பினை எடுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. கூடவே ஒரு கமெண்ட்டையும் போட்டுள்ளார். அதில், "விஞ்ஞான பூர்வமான எதையும் ஏற்க மறுக்கும் பகுத்தறிவு வியாதி. மாற்று மத நம்பிக்கைகளை இவர் கொச்சை படுத்தியது உண்டா. முழு இந்து விரோதி" என்று தெரிவித்துள்ளார்.

இந்து விரோதி

இந்து விரோதி

இதில் "முழு இந்து விரோதி" என்று எச்.ராஜா யாரை சொல்கிறார் என தெரியவில்லை.. எனினும், இந்த கமெண்ட்டுக்கு ஆதரவும், எதிர்ப்பும் பதிவாகி வருகின்றன... அதில் ஒருவர், "இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய அரசின் சுகாதாரத்துறை, இஸ்ரோ - இவங்கள எல்லாம் அதிகாரப்பூர்வ அறிக்கை விட சொல்லுங்க... கிரகணத்தின்போது என்ன செய்யலாம், செய்யக்கூடாது, சாப்பிடலாமா,கூடாதா, வெளியே போகலாமா? அப்டின்னு... சுனாமி,புயல் வர்ரப்ப அரசு எச்சரிக்கை விடுப்பது போல" என்று எச்.ராஜாவுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+