இட்.. அது பட்.. ஆனால் வாட்.. என்ன.. இப்படி இருக்குது எச். ராஜாவின் இந்த டிவீட்டை படித்தால்!
மதிமுகவின் கணேச மூர்த்தியின் பெயர் குறித்து எச்.ராஜா ட்வீட் போட்டுள்ளார்.
சென்னை: எப்போ, என்ன, எதை பத்தி பேசறதுன்னே எச்.ராஜாவுக்கு தெரியாது போல! எதை பற்றி கவலைப்படறார் பாருங்க எச்.ராஜா?
நாட்டில எவ்ளோ பிரச்சனைகள் நடந்துட்டிருக்கு.. கூட்டணி சமாச்சாரம், தேர்தல் அமர்க்களம், பொள்ளாச்சி பயங்கரம்.. இது எல்லாத்துக்கும் மேல தினம் தினம் நம்மை கொளுத்தி எடுக்கிற வெயில்.. இப்படி நாம் இருந்தால், மதிமுகவின் கணேச மூர்த்தி பெயரை பற்றி இப்போது கவலைப்பட்டு கொண்டுள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா!
தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "படித்ததில் பிடித்தது. நாத்திக வாதம் பேசி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளை உடைத்த ஈ.வெ..ரா பிறந்த ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அதே நாத்திக கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் பெயர் கணேச மூர்த்தி. What an irony" என்று பதிவிட்டுள்ளார்.

தந்தை பெரியார்
ஆக கடைசியில் அங்கே, இங்கே என சுத்தி திரும்பவும் பெரியார் விஷயத்துக்கே மறக்காமல் வந்துவிட்டார் எச். ராஜா! கணேசமூர்த்திக்கு எப்படியோ 70 வயதிருக்கும். 1947-ல் பிறந்த நபருக்கு வைத்த பெயர் குறித்து இப்போது கவலை எழுப்பி உள்ளார் எச்.ராஜா! அதுவும் 100 வயதை என்றைக்கோ கடந்த தந்தை பெரியாருடன் ஒப்பிட்டு!

ஈரோடு
கணேசமூர்த்தி பிறந்ததும் எப்படியும் அவரே இந்த பெயரை தனக்காக வைத்து கொண்டிருக்க முடியாது. அவர்கள் பெற்றோர்தான் வைத்திருக்க வேண்டும். அதேபோல, கணேசமூர்த்தி ஈரோட்டில் நேற்று பிறந்து, இன்றைக்கு அவரது பெற்றோர் பெயர் வைக்கவில்லை.
|
என்ன அவசியம்?
அதனால் பெரியாரையும், பெயரையும் சம்பந்தப்படுத்தி இன்றைய நாளில் ட்வீட் போட வேண்டிய அவசியம்தான் என்னவென்று தெரியவில்லை. அதேபோல, வைக்கப்படும் பெயரில் என்ன பெரிதாக இருந்துவிட போகிறது என்றும் புரியவில்லை.

எந்த ராஜா?
ஆனால் இந்த ட்வீட்டுக்கு கீழே, "'பெயர்' அவரவர் பெற்றோரின் அறியாமையால் வைக்கப்படுகிறது.. உதாரணம்: "ராஜா" என்று கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. ஆனால் எந்த ராஜாவை நெட்டிசன்கள் சொல்கிறார்கள்?!
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications