பரவாயில்லை.. நல்லா டிரெண்ட் பண்ணீங்க.. நன்றி நன்றி.. மோடி எதிர்ப்பாளர்களை கலாய்த்த எச். ராஜா!
கோ பேக் மோடி சொன்னவர்களுக்கு எச் ராஜா நன்றி சொல்லி உள்ளார்
Recommended Video
சென்னை: "மோடிஜி தமிழகம் வருவதை ட்ரெண்ட் செய்வதை பெருமிதமாக விளம்பரப்படுத்தியவர்களுக்கு என் நன்றி" என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
துக்ளக் ஆசிரியரான சோ-வும் பிரதமர் மோடியும் நல்ல நண்பர்கள். மோடிக்கும், சோவுக்கும் இடையேயான நட்பு ஆழமானதும்கூட.
துக்ளக் பத்திரிகையின் 38-ம் ஆண்டு விழா, ஆசிரியர் சோ தலைமையில் சென்னையில் நடந்தது. 2008-ல் நடந்த இந்த விழாவுக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடியும் வந்திருந்தார்.

முதல்வர் மோடி
ஆனால், அன்றைய நாட்களிலேயே மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது போலும். இதனை தன்னுடைய பேச்சில் விழாவில் சுட்டிக்காட்டி பேசியிருந்தார் சோ ராமசாமி. அப்போது முன்வரிசையில் மோடி உட்கார்ந்திருந்தார்.

திரும்பி போ
சோ பேசும்போது, "இங்கே நிறைய போஸ்டர்கள் எல்லாம் "மோடியே திரும்பி போ"ன்னு ஒட்டியிருக்காங்க. திரும்பி போகத்தானே போறார். பின்ன என்ன, இங்கேயேவா மெட்ராஸிலேயேவா இருக்க போறார்?" என்று சொல்லி இருந்தார்.
|
ஹேஷ்டேக்
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். அப்போது வழக்கம்போல் தமிழகம் சார்பில் கோ பேக் மோடி முழக்கம் ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் ஆனது. இதற்கு எச்.ராஜா ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "Go Back Modi என்று மோடி ஜி தமிழகம் வருவதை Trend செய்வதை பெருமிதமாக விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி..." என்று பதிவிட்டுள்ளார்.

பப்ளிசிட்டி ஏஜென்ட்
இந்த பதிவுக்கு கீழே, சோ அன்று பேசிய வீடியோவை இதனுடன் இணைத்துள்ளார். அந்த வீடியோவில் சோ பேசும்போது, "இந்த நிகழ்ச்சிக்கு பெருமளவு விளம்பரம் தந்த பலவித இயக்கங்களுக்கும் நன்றி. முன்னாடி கலைஞர் எங்க டிராவை தடை செய்து நடந்தபோது, டிராமில் நான் பெரிய ஆளா போய்ட்டேன். அப்போ நான் சொன்னே, பப்ளிசிட்டி ஏஜென்ட்டை நான் நியமிச்சிருக்கேன்னு. அந்த மாதிரி பப்ளிசிட்டி ஏஜென்ட்டுகளை இப்போ நான் நியமித்து இருக்கிறேன்" என்று கருணாநிதியை தாக்கி பேசுகிறார்.
சோ ராமசாமியின் இந்த வீடியோவை பதிவிட்ட எச்.ராஜா, "மோடி ஜி தமிழகம் வருவதை Trend செய்வதை பெருமிதமாக விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி..." என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications