திருப்பூரில் பஸ் விட்டபோது குதிரை சவாரி கேட்டு மறியல் செய்தவர்கள்தானே இந்த இடதுசாரிகள்.. எச் ராஜா
Recommended Video
சென்னை: திருப்பூரில் பஸ் விட்ட போது குதிரை சவாரி கேட்டு மறியல் செய்தவர்கள்தான் இந்த இடதுசாரிகள் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பொதுத் துறை வங்கி தலைவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்10 வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக செயல்படும் என தெரிவித்தார்.
மேலும் 2017-ஆம் ஆண்டு 27 பொதுத் துறை வங்கிகள் இருந்தன. நேற்றைய அறிவிப்புக்கு பின்னர் நாட்டில் மொத்தம் 12 பொதுத் துறை வங்கிகள்தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு வங்கி ஊழியர்கள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

27 பொதுத் துறை வங்கிகள்
இன்று வங்கி ஊழியர்கள் சங்கம் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் வங்கிகள் இணைப்பு: 27 பொதுத்துறை வங்கிகள் 12 ஆக இணைப்பது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை இடதுசாரிகள் எதிர்த்துள்ளனர்.
|
எச் ராஜா டுவீட்
இதில் ஆச்சரியம் இல்லை. திருப்பூரில் டவுன் பஸ் விட்டபோது குதிரை வண்டி ஓட்டுபவர்கள் வேலை இழப்பார்கள் என்று கூறி சாலைமறியல் செய்தவர்கள் என்று விமர்சித்துள்ளார். பொதுவாக எச் ராஜா எப்போது டுவிட்டரில் கருத்து தெரிவித்தாலும் அதற்கு பதில் கருத்தை நகைச்சுவையாகவும் பொட்டில் அடித்தாற்போலவும் அவரது நெட்டிசன்கள் தெரிவித்து வருவர்.
|
சாதாரணம்
உங்க பிழைப்பு கெடமா இருக்குற வரைக்கும் அடுத்தவன் பிழைப்பு கெடுவதும், கெடுத்துவிடுவதும் உங்களுக்கெல்லாம் சாதாரணமே.
|
அமெரிக்காவைவிட அதிகம்
பொருளாதார சீர்திருத்தமா?? கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் சீனா, அமெரிக்காவை விட அதிகம்னு சொன்னீங்க
|
வரவேற்பு
"ஒரே நாடு ஒரே வங்கி" இதை தான் எதிர் பார்க்கிறோம்.
இதே போல் அங்கு சென்றால் கிடைக்கும் வரவேற்பையும் கவனித்தால் நன்றாக இருக்கும்.
|
விஷயம்
உங்களுக்குள் இருக்கும் அரசியல் போட்டியில், சாதாரண மனிதனின் தேவைகளை நிறைவேற்றுவதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. GDP வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவை பொருட்படுத்தாமல் ஒரு நடைமுறை நிர்வாகம் சார்ந்த விஷயத்தை பற்றி பேசுவது எப்படி நியாயமாகும்?
|
இந்திய வல்லரசு
ஆட்டோ கண்ணாடி திருப்புனா ஆட்டோ ஓடுமா சார்.. 😂😂...
இந்தியா வல்லரசு ஆகிவிடும் வங்கிகளை இணைப்பதால்...
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications