சும்மா ஒரு சந்தேகம்.. ஆஹா.. எச். ராஜாவுக்கு வர்றது பூராவும் வில்லங்கமாகவே இருக்கே!
முத்தலாக் சட்டம் குறித்து எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்
Recommended Video
சென்னை: திடீர் திடீரென எச்.ராஜாவுக்கு வரும் சந்தேகங்கள் எல்லாம் ஏடாகூடமாகி, விவகாரம் எங்கேயோ திசைதிருப்பி விடுவதை போலவே இருக்கிறது.
இவ்வளவு நாள் சர்ச்சையிலும், பிரச்சனையிலும் உள்ள முத்தலாக் தடை சட்டத்தை பற்றிதான் தனது ட்விட்டரில் சந்தேகம் கேட்டுள்ளார்.

"முத்தலாக் தடை சட்டத்தை எதிர்ப்பது, பலதார மணத்தை ஆதரிப்பது, தன் மனைவியை பர்தா அணிய நிர்பந்திப்பது. ஆகியவை முற்போக்கு சிந்தனையா? சும்மா ஒரு சந்தேகம்" என்று பதிவிட்டுள்ளார்.
இப்படி ஒரு ட்வீட்டை எதற்காக இன்று போட்டார் என்று தெரியவில்லை. சிலை கடத்தல் விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக எச்.ராஜாவின் நெருங்கிய நண்பரான பொன்.மாணிக்கவேல் சொல்லி உள்ளார். அந்த விஷயத்தில் இதுவரை வராத சந்தேகம் எச்.ராஜாவுக்கு இதில் ஏன் வருகிறது என்று தெரியவில்லை.
முத்தலாக் தடை சட்டத்தை எதிர்ப்பது, பலதார மணத்தை ஆதரிப்பது, தன் மனைவியை பர்தா அணிய நிர்பந்திப்பது. ஆகியவை முற்போக்கு சிந்தனையா? சும்மா ஒரு சந்தேகம்.
— H Raja (@HRajaBJP) July 26, 2019
முத்தலாக் சொன்னதற்காக 3 வருஷ சிறை தண்டனையை ரத்து செய்யணும், ஷரியத் சட்டப்படியே முஸ்லிம் பெண்ணுக்கு செட்டில்மெண்ட் செய்வது உள்ளிட்ட திருத்தங்களை தமிழக அரசே அனுப்பி வைத்துள்ள நிலையில், எச்.ராஜாவுக்கு இதில் ஏன் சந்தேகம் வரவில்லை என்று தெரியவில்லை.
அப்படியே முற்போக்கு சிந்தனை பற்றிதான் எச்.ராஜா சொல்வதாகவே வைத்து கொண்டாலும், சபரிமலையில் பெண்களை தரிசனம் செய்ய விடுவதில், முற்போக்குத்தனத்தை காட்டலாமே என்றுதான் சொல்ல தோன்றகிறது!
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications