வெல்கம் கேப்டன்.. எச். ராஜா குஷி.. "கேப்டனை விட்ருங்கய்யா பாவம் அவரு".. நெட்டிசன்கள் கலாய்!
விஜயகாந்த்துக்கு எச்.ராஜா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: வெல்கம் கேப்டன் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தேமுதிக கூட்டணி தலைவர் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எச்.ராஜாவை புரிந்து கொள்ளவே முடியவில்லை. இவருக்கு யாரை பிடிக்கும், பிடிக்காது என்ற முடிவுக்கே நம்மால் சில சமயங்களில் வர முடிவதில்லை.
எல்லாரையுமே திட்டி தீர்ப்பவர் போலும் என்று நினைத்தால், திடீரென்று பொன்.மாணிக்கவேலுவை பாராட்டி, மகிழ்ந்து, எக்கச்சக்கமாக சப்போர்ட் செய்வார். இப்போதும்கூட விஜயகாந்த்துக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.

வரவேற்பு
விஜயகாந்த்தை அரசியல் தாண்டி எல்லோருக்குமே பிடிக்கும் என்றாலும் எச்.ராஜாவுக்கும் பிடிக்கும் என்பது இப்போதுதான் தெரிகிறது. அதனால்தான் இதுவரை எந்த அரசியல் கட்சி தலைவரும் அதிமுக-தேமுதிக கூட்டணிக்கு வாழ்த்து சொல்லாத நிலையில், முதல்ஆளாக எச்.ராஜா வரவேற்று ட்வீட் போட்டுள்ளார்.
|
வெல்கம்
அதில், "வெல்கம் கேப்டன். 2014 தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அனைவரும் சேர்ந்து ஆளும் அஇஅதிமுகவுடன் ஒரு மெகா கூட்டணி அமைந்துள்ளது. அன்று NDA வை விட திமுகவிற்கு வெறும் 2% வாக்குகளே அதிகம் என்பது உலகறிந்த விஷயம். எனவே திமுக + காங்4% மநகூ part 2% அவ்வளவுதான். கடுமையாக உழைப்போம் 40 ம் நமதே" என்று பதிவிட்டுள்ளார்.

பாசம்
ஒருவேளை பாஜக மீது விஜயகாந்த் அதிக அளவு மரியாதை வைத்திருப்பதால் இந்த ட்வீட் விழுந்துள்ளதா? அல்லது பாஜக டெல்லி லாபிகள் அதிக அளவு விஜயகாந்த் மீது பாசம் வைத்துள்ளதால் இந்த ட்வீட் பதிவிடப்பட்டுள்ளதா தெரியவில்லை.

நல்ல மனுசன்யா அவரு
ஆனால் பாஜக-தேமுதிகவுக்கான பிடிப்பு கொஞ்சமும் குறையாமல் அன்றிலிருந்து இன்றுவரை நீண்டு வருகிறது என்பதுதான் உண்மை. எப்படியோ எச்.ராஜாவே கேப்டனை வரவேற்று விட்டது மகிழ்ச்சிதான். ஆனால் இந்த ட்வீட்டுக்கு கீழே நிறைய கமெண்ட்கள் பதிவாகி வந்தாலும், அதில் ஒரு கமெண்ட் இப்படி உள்ளது: "நல்ல மனுசன்யா Captain. அவர விட்ருங்கயா.."
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications