தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான முதல் எம்.பி வசந்தகுமார்.. 2-ஆவது மக்கள் பிரதிநிதி!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு மரணமடைந்த 2ஆவது மக்கள் பிரதிநிதி வசந்தகுமார் ஆவார். தமிழகத்தில் முதன் முதலாக கொரோனாவுக்கு பலியானவர் எம்எல்ஏவாக இருந்த ஜெ அன்பழகன் .
Recommended Video
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை தொட்டுள்ளது. இந்த நோய்க்கு மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் என பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமடைகிறார்கள். சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறார்கள்.

அப்பல்லோவில் அனுமதி
அந்த வகையில் கன்னியாகுமரி தொகுதியின் காங்கிரஸ் எம்பியாக இருந்த வசந்தகுமாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கடந்த 10-ஆம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நிமோனியா
அவர் தீவிர சிகிச்சை பிரிவில் (சிசியூ) வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கடுமையான கோவிட் நிமோனியா ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. 24 மணி நேரமும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை இன்று மோசமடைந்தது.

கவலைக்கிடம்
இதை அறிந்த அவரது அண்ணன் மகளும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன் சென்னை வந்திருந்ததாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இவரது உடல்நிலை மேலும் மோசமாகி இன்று காலமாகிவிட்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள், நண்பர்கள், தொழிலதிபர்கள் என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

கொரோனாவுக்கு மரணம்
தமிழகத்தில் கொரோனாவுக்கு மரணமடைந்த 2வது மக்கள் பிரதிநிதி வசந்தகுமார். அதுபோல் கொரோனாவுக்கு இறந்த முதல் தமிழக எம்பியாவார். முன்னதாக திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த ஜூன் 10-ஆம் தேதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications