Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

170 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழா போகுதா? கியரை மாற்றிய திமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களத்தில் சில சமுதாயங்களின் வாக்குகள் வெளிப்படையாக பேசப்படாத போதும், தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் அளவுக்கு தாக்கம் செலுத்தி வருகின்றன... அந்த வரிசையில், முத்தரையர் சமுதாயம் பல மாவட்டங்களில் முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது... வரப்போகும் தேர்தலில் இச்சமுதாய ஓட்டுகள் யாருக்கு சாதகமாக அமைய போகின்றன? இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..

தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, பெரம்பலூர் உள்ளிட்ட மத்திய மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் முத்தரையர் சமூகத்தின் வாக்கு வங்கி கணிசமான அளவில் உள்ளது... அரசியல் வட்டாரங்களின் கணிப்புப்படி, சுமார் 30 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி யாருக்கு என்பதைக் தீர்மானிக்கும் அளவுக்கு முத்தரையர் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

170 Seat Muthrayar DMK 170

குறிப்பாக, தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் மட்டும் 5.38 லட்சம் முத்தரையர் வாக்குகள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதேபோல் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இச்சமுதாயத்தின் அரசியல் செல்வாக்கு கணிசமாகவே உள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா - அசைக்க முடியாத ஆதரவு

அரசியல் வரலாற்றை நாம் சற்று பின்னோக்கி பார்க்கும்போது, முத்தரையர் சமூகத்தின் வாக்குகள் நீண்ட காலமாக அதிமுகவுடன் உறுதியான பிணைப்பிலேயே இருந்துள்ளது.. குறிப்பாக, எம்ஜிஆர் காலத்தில் முத்தரையர் வாக்குகள் "லட்டு போல" அதிமுகவுக்கே சென்றதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு எம்ஜிஆர் மீது இச்சமூகத்துக்கு தனிப்பட்ட ஈர்ப்பு இருந்தது.

எம்ஜிஆருக்குப் பிறகு, ஜெயலலிதா தலைமையிலும் இந்த ஆதரவு சிதறாமல் பாதுகாக்கப்பட்டது. முத்தரையர் சமூகத்தின் நம்பிக்கையை நிலைநாட்டி, அதிமுக வெற்றிகளுக்கான அடித்தளமாக அந்த வாக்கு வங்கியை ஜெயலலிதா மாற்றியமைத்தார் என்பதே பொதுவான அரசியல் மதிப்பீடு.

எடப்பாடி காலகட்டம்: மெல்ல தளர்ந்த செல்வாக்கு

ஆனால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு , அதிமுகவில் முத்தரையர் சமூகத்தின் அரசியல் செல்வாக்கு மெல்ல மெல்ல குறைந்ததாக சொல்லப்படுகிறது. கட்சியின் முக்கிய முடிவுகளில் அந்த சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்தது, வாக்கு வங்கியில் ஒரு அளவு தளர்வை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாகவே, வரவிருக்கும் தேர்தல்களில் முத்தரையர் ஆதரவை மீட்டெடுக்க அதிமுக பல்வேறு அரசியல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது... கூட்டணி கணக்குகள் முதல், வேட்பாளர் தேர்வு வரை முத்தரையர் வாக்குகளை மனதில் வைத்து திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த மே மாதம் நடைபெற்ற பெரும்பிடுகு முத்தரையர் 1350வது சதய விழாவை சிறப்பாக கொண்டாட அதிமுகவுக்கு அழைப்பு விடுத்ததும், வரவிருக்கும் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் சீட் ஒதுக்கீடு இருக்கும் என்ற தகவல்களும் இதன் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றன.

அதேபோல், பழைய செல்வாக்கை மீட்டெடுக்க தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பகுதிகளில் முக்கிய பதவிகள் வழங்குதல், சமூக தலைவர்களுடன் தொடர்பை வலுப்படுத்துதல் போன்ற முயற்சிகளிலும் அதிமுக கவனம் செலுத்துதையும் நம்மால் கவனிக்க முடிகிறது...

திமுகவின் மைக்ரோ லெவல் அரசியல்

இதற்கிடையே, தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் மற்றும் முத்தரையர் சமூக மக்களின் சுமார் 80 சதவீத வாக்கு வங்கியை திமுக தன் பக்கம் ஈர்த்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான வேலை திட்டங்களை திமுக மைக்ரோ லெவலில் செயல்படுத்தி வருகிறது. சாதி அடிப்படையிலான சமூக அரசியலையும், அதனை தன் பக்கம் ஈர்க்கும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து திமுக முன்னெடுத்து வருகிறது.

மெய்யநாதன் போன்றவர்களை அமைச்சராக்கியது, இந்த சமூக அரசியல் அணுகுமுறைக்கு ஒரு உதாரணமாக கூறப்படுகிறது... முத்தரையர் போன்ற சிறு சமூகங்களையும், முக்குலத்தோர் வாக்கு வங்கியின் பெரும்பகுதியையும் திமுக தன் பக்கம் ஈர்த்துவிட்டதால், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் பெரிய பலன் இருக்காது என்ற அரசியல் கணிப்புகளும் முன்வைக்கப்படுகின்றன.

தவெக: புதிய ஈர்ப்பு முயற்சி

இதற்கிடையே, தவெக தலைவர் விஜய் முத்தரையர் சமூக மக்களின் கவனத்தை மெதுவாகப் பெற்றுவருகிறார்... எனவே விஜயை தவிர்த்துவிட்டு இந்த விஷயத்தை பார்க்க முடியாது..

பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவில், தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் தொடர்ந்து இரு முறை பங்கேற்றது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றது... அந்த விழாவில் முத்தரையர் மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதும் குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வுகள், முத்தரையர் சமூகத்துடன் தவெக நெருக்கத்தை வளர்க்கும் முயற்சியாகவே மதிப்பிடப்படுகிறது.

சர்வே முடிவுகள்: திமுகவுக்கு பிளஸ்?

ஆனால், முத்தரையர் ஓட்டுகளை ஈர்க்க திமுக ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்ட அரசியலை முன்னெடுத்து வருகிறது. இதன் வெளிப்பாடாக, உளவுத்துறை மற்றும் தனியார் ஆய்வு நிறுவனங்கள் சமீபத்தில் எடுத்ததாக கூறப்படும் சர்வே விவரங்கள் அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாகி உள்ளன.

அந்த சர்வேகளின்படி, முத்தரையர் வாக்குகளில் திமுக 50-55% ஆதரவைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது... அதிமுக 30-35%, தவெக 7-10%, நாதக 3-3.5% என்ற அளவில் ஆதரவு உள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சர்வே ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு திமுக செம குஷியாகிவிட்டதாம்.. கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, முத்தரையர் வாக்குகளில் திமுக கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளதாக அந்த சர்வே ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் தொடர்ச்சியாக, வரவிருக்கும் தேர்தலில் முத்தரையர் ஓட்டுகள் பெரும்பாலும் திமுகவுக்கு மாறும் வாய்ப்பு அதிகம் என்று சர்வே நிபுணர்களும் அரசியல் பார்வையாளர்களும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அரசியல் ஆதரவு: திமுக கூட்டணிக்கு வலு

இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்றைய தினம் தமிழக சட்டசபை தேர்தலில் தமிழர் தேசிய கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதன் தலைவர் செல்வக்குமார், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவை அறிவித்தார்.

அப்போது செல்வக்குமார் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, வரும் 25ம் தேதி "அரசியல் அதிகாரம் மீட்பு மாநாடு" நடத்த உள்ளோம். அதற்கான அழைப்பிதழை முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கி அழைப்பு விடுத்துள்ளோம். சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த லோக்சபா தேர்தலில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக தேர்தல் பணி செய்தோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு கொடுத்த குறைந்தபட்ச வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை; அலட்சியப்படுத்தினர். அதனால்தான் இந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தோம் என்ற அவரது கருத்து, அரசியல் வட்டாரங்களில் கவனத்தை பெற்றுள்ளது.

170 சீட் கணிப்பு உடைகிறதா

சில நாட்களுக்கு முன்பு மூத்த அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் ஒரு பேட்டியில், "170 தொகுதிகள் போக மீதமுள்ள இடங்களில் பாஜகவிற்கு 30 தொகுதிகள், பாமகவிற்கு 23 தொகுதிகள், டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகள் வழங்கப்படலாம் பேச்சுகள் அடிபடுகின்றன.

தென் மாவட்டங்களில் முக்குலத்தோர், முத்தரையர் சமூக மக்களின் 80 சதவீத வாக்கு வங்கியை திமுக தன் பக்கம் ஈர்த்து வருகிறது.. இதற்கான வேலை திட்டத்தை திமுக சரியாக நடத்தி வருகிறது.. மெய்யநாதன் போன்றவர்களை அமைச்சராக்கியது இதற்கு ஒரு உதாரணம் .. இதனால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் அவர்களுக்குப் பெரிய பலன் இருக்காது" என்று கூறியிருந்ததையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+