இதுக்கும் விலை ஏற்றமா?.. கட்டிங், சேவிங் செய்ய ஜனவரியில் இருந்து புது கட்டணம்
ஜனவரியில் இருந்து முடி கட்டிங் ரூ.120 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல், சேவிங் கட்டணம் 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: ஜனவரியில் இருந்து முடி கட்டிங் ரூ.120 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல், சேவிங் கட்டணம் 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை கோவிலம்பாக்கத்தில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்க முன்னேற்ற பேரவையின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், கடை வாடகை மற்றும் அழகு சாதன பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு என செலவு அதிகரித்துள்ளதால், முடித்திருத்தும் கட்டணம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதுவரை கட்டிங் மற்றும் சேவிங் கட்டணமாக ரூ.150 வாங்கப்பட்டது. தற்போது ரூ. 170 கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல், கட்டிங் 120 ( பழைய கட்டணம் 90), தாடி ஒதுக்குதல் ரூ.80 (60, 70), ஆயில் மசாஜ் ரூ.170 (130, 140), பிளீசிங் ரூ. 500 முதல் 1200, ஹேர் டை மட்டும் ரூ.170 (150) என்று உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், கல்வி, வேலைவாய்ப்பில் மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கிடையே, நெருப்பு கட்டிங், டிசைன் கட்டிங் என பல கட்டிங்குகள் அறிமுகப்படுத்தப்பட்டு கட்டணங்கள் வித, விதமாக வாங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications