முடிந்தது அரையாண்டு தேர்வு.. விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு எப்போது?
Subscribe to Oneindia Tamil
அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முடிந்த நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பதை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு கடந்த இரு வாரங்களாக நடந்து வந்தது. அதாவது டிசம்பர் 11ம் தேதி தொடங்கி 23ம் தேதியான இன்றுடன் நடப்பு கல்வியாண்டுக்கான அரையாண்டு தேர்வுகள் முடிந்தது.

இதையடுத்து 10 நாட்கள் விடுமுறைக்கு பின் ஜனவரி 3ம் தேதி 2020ம் ஆண்டு திறக்கப்படும் என்ற பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
2ம் தேதி ஊரகப்பகுதி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் காரணத்தால் 3ம் தேதிக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications