நாத்தனார் கொடுமை.. ஜெயிலுக்கு போகும் ஹன்சிகா மோத்வானி? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. பரபர பாலிவுட்
சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி மீது அவரது நாத்தனார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஹன்சிகாவை போலீசார் கைது செய்து விசாரிக்கலாம் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹன்சிகாவுக்கு திருமணமான 10 நாட்களில் அவரது சகோதரர் பிரசாந்த் மோத்வானி, அவரது மனைவி முஸ்கான் நான்ஸியை பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், பாலிவுட் என இந்தியா முழுவதும் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. 1991 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த ஹன்சிகா, முதலில் குழந்தை நட்சத்திரமாக இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து தெலுங்கு திரைப்படமான தேசம்முதுகு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். முன்னதாக இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். அவரது தந்தை பிரபல தொழிலதிபர் என்பதோடு, தாய் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஹன்சிகா மோத்வானி
தமிழில் தனுஷுடன் மாப்பிள்ளை படத்தில் நாயகியாக அறிமுகமானவர். அதற்கு பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, வேலாயுதம், எங்கேயும் காதல் என பல திரைப்படங்களில் நடித்த ஹன்சிகாவின் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் திரையுலகில் பீக்கில் இருக்கும் போது திடீரென தனது தோழியின் கணவரான சோஹல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகாவின் தோழிக்கும் கதுரியாவுக்கும் விவாகரத்தான நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த திருமணம் நடைபெற்றது.
போலீஸ் புகார்
இது ஒரு புறம் இருக்க ஹன்சிகாவுக்கு திருமணம் முடிந்த பத்தே நாட்களில் ஹன்சிகாவின் சகோதரரான பிரசாந்த் மோத்வானி, அவரது மனைவி முஸ்கான் நான்சி ஜேம்ஸை பிரிந்து விட்டார். இந்த நிலையில் ஹன்சிகா மோத்வானியையும் அவரது தாயார் மேனா மோத்வானியும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் பிரசாந்துடன் தான் இணைந்து வாழ்வதற்கு இருவரும் தடையாக இருப்பதாக முஸ்கான் மும்பை போலீசில் புகார் கொடுத்தார்.
மும்பை நீதிமன்றம்
புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அம்போலி போலீசார், ஹன்சிகா, பிரசாந்த் மற்றும் அவர்களது தாயாரான மேனா மோத்வானி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என ஹன்சிகா ஏற்கனவே மும்பை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஹன்சிகா மோத்வானி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கொடுக்கப்பட்டிருப்பதாக ஹன்சிகா கூறியிருந்தார்.
கைதாக வாய்ப்பு
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் ஹன்சிகாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த மும்பை உயர்நீதிமன்றம் அவருக்கு எதிரான காவல் துறையினரின் விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்டிருக்கிறது. இதை அடுத்து ஹன்சிகாவுக்கு எதிரான வழக்கு விசாரணையை தொடர போலீசார் முடிவு செய்திருக்கின்றனர். முதற்கட்டமாக ஹன்சிகாவை காவல் நிலையத்திற்கு நேரில் அழைத்து விசாரிக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் தேவைப்பட்டால் அவரை கைது செய்யலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஹன்சிகா மோத்வானி தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசில் புகார் அளிக்கும் அளவுக்கு ஹன்சிகா அவ்வளவு கொடுமையையா செய்திருக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications