வந்தாச்சு அறிவிப்பு.. தமிழ்நாட்டில் 2023ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் எத்தனை தெரியுமா?

தமிழக அரசின் விடுமுறை நாட்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023ம் ஆண்டிற்கான தமிழக அரசின் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.. மொத்தம் 24 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது... ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 5 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை லிஸ்ட்டும் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுவிடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.. அந்த வகையில், 2022-ம் ஆண்டு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது...

இன்னும் சில நாட்களில் 2023-ம் ஆண்டு தொடங்க உள்ளது.. இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

 ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகைகள் காரணமாக, அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த பொது விடுமுறை பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும். வரும் வருடத்தில், பொது விடுமுறை நாட்கள் எத்தனை என்பதை அதில் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.. அந்தவகையில், 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 லீவு லீவு

லீவு லீவு

24 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அதில், 8 விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அமைந்துள்ளது... அரசு பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்படும்... தமிழக அரசு வெளியிட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலின்படி, ஜனவரி மாதத்தில் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஞாயிற்றுக்கிழமை, பொங்கல் பண்டிகையையொட்டி, 15, 16, 17 ஆகிய தினங்கள் முறையே ஞாயிறு, திங்கள், செவ்வாய் கிழமைகளில் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 24 நாட்கள் லீவு

24 நாட்கள் லீவு

அதேபோல், குடியரசு தினம், தை பூசம், தெலுங்கு வருடப் பிறப்பு, வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொஹரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் என்பன உள்ளிட்ட மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.. கடந்த அக்டோபர் மாதம், இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 ஸ்வீட் நியூஸ்

ஸ்வீட் நியூஸ்

அந்த அறிக்கையில், பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தினங்களில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தைப் பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட 8 நாட்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடப்பட்டிருந்தது இந்த அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.. இந்நிலையில், 2023ம் ஆண்டிற்கான தமிழக அரசின் விடுமுறை, மொத்தம் 24 நாட்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை பட்டியல் இதுதான்:

லிஸ்ட்

லிஸ்ட்

?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+