போலாம் ரைட்! இன்று முதல் ஸ்பெஷல் ஏற்பாடு.. சுபமுகூர்த்தமும் வந்தாச்சு.. சென்னைக்கு ஹேப்பி நியூஸ்!
சென்னை: வார இறுதி துவங்கிவிட்ட நிலையில், இன்று முதல் சென்னை உட்பட பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.. இதுகுறித்து அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
எப்போதுமே வார இறுதி நாட்களில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாகும்.. இப்போது கோடை விடுமுறை என்பதால், பொதுப்போக்குவரத்துகளில் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
பயணிகள்: எனவே, பயணிகளின் வசதிக்காகவே தமிழக போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.. அதுமட்டுமல்லாமல், இந்த வாரம் சுபமுகூர்த்த நாட்களும் வருகிறது. எனவே, நிறைய பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள் என்பதால், சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

அந்தவகையில், இன்று முதல் 3 நாட்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன... இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சொன்னதாவது :
இறுதி நாட்கள்: மே 18, 19 தேதிகள் வார இறுதி நாட்கள் என்பதுடன் சுபமுகூர்த்தமும் சேர்ந்து வருவதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பலரும் பயணம் மேற்கொள்வார்கள்.. எனவே, போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 1,875 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது..
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 555 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு: சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 65 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். அதேபோல, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன..
இதைத்தவிர, கூடுதல் பஸ்களையும் இயக்கவும் தயாராக உள்ளோம். எனவே, www.tnstc.in என்ற வெப்சைட்களிலும், tnstc என்ற ஆப் மூலமாகவும் பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளும்வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க போதிய அலுவலர்களும் ஆங்காங்கே நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.












Click it and Unblock the Notifications