கிட்ட வந்துருச்சு.. ரயிலில் போறீங்களா? இந்த "பெட்டியில்" மட்டும் ஏறிடாதீங்க! ரயில்வே அதிரடி! சூப்பர்
சென்னை: விரைவு ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக பெட்டியின் இருக்கைகளில் மற்ற பயணிகள் ஆக்கிரமிப்பதை தடுக்க, சிறப்பு சோதனை நடத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ரயில்களில் மூத்த குடிமக்களை போலவே, மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு சலுகைகள், சிறப்பு வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து தந்து வருகிறது.. மாற்று திறனாளிகளுக்கென இருக்கை மற்றும் படுக்கை ஒதுக்கீடுகள் வெகு காலமாகவே இருந்து வருகின்றன. தற்போது ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு பயணம் மேற்கொள்ளும் போது, மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழை டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினால் போதும்.

ஐஆர்சிடிசி தளத்திலேயே டிக்கெட் முன்பதிவு செய்யும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி தெரிவுகள் எப்போதுமே இருக்கின்றன.. மாற்றுத்திறனாளியின் உதவியாளருக்கும் இந்த ஒதுக்கீட்டிற்கு உட்பட்டே சீட்டு வழங்கப்பட்டு வருகின்றன.. வந்தே பாரத் ரயில்களில் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காகவே இன்ஜின் அமைந்துள்ள கோச்சில் தனிச்சிறப்பு மிக்க பெரிய கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஹைகோர்ட்: எனினும், சென்னையை சேர்ந்த வைஷ்ணவி ஜெயகுமார் என்பவர், ரயில் நிலையங்கள், ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரி சமீபத்தில் மனு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.
இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை ஹைகோர்ட்டும் உத்தரவிட்டிருக்கிறது.. அதுமட்டுமல்லாமல், மாற்றுத் திறனாளிகளின் புகார்கள் குறித்து ரயில்வே வாரியம் எடுத்த நடவடிக்கை குறித்து, மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையம் சூமோட்டா வழக்காகவும் விசாரணை செய்து வருகிறது.
மாற்று திறனாளிகள்: இதற்கெல்லாம் காரணம், விரைவு, மெயில் ரயில்களில் ஒதுக்கப்பட்டுள்ள பொது பெட்டிகளில் ஒரு பெட்டி மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கு என பிரத்யேகமாக தலா ஒரு பெட்டி ஒதுக்கப்பட்டிருக்கிறது.. ஆனாலும், இந்த பெட்டி இருக்கைகளில், மற்ற பயணிகள் ஆக்கிரமிப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.. எனவேதான், இந்த புகார்களை தொடர்ந்து, அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தவகையில், அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் ரயில்களில் மே 27-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை சிறப்பு சோதனை நடத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டிருக்கிறது.. இதுதவிர, கடந்த 6 மாதங்களாக, இந்த பெட்டிகளில் ஆக்கிரமித்து பயணித்தவர்கள் மீது ரயில்வே மண்டலங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
டிக்கெட் இல்லை: மாற்றத் திறனாளிகளுக்கான பிரத்யேக ரயில் பெட்டிகளில் மற்ற பயணிகள் பயணம் செய்வதை தடுக்க 12 நாட்கள் சிறப்பு சோதனை நடத்துவதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பினை தெரிவித்து வருன்றனர்.. அதேசமயம், ரிசர்வேஷன் இல்லாத பெட்டிகளில் உரிய டிக்கெட் இல்லாமல், ஆக்கிரமித்து பயணிப்போர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications