வெட்கப்பட்ட வானதி.. "வாங்க கண்ணு" என்று கையை பிடித்து இழுத்து.. நெகிழ்ந்து போன கோவை..!

வெட்கப்பட்டுக் கொண்டே வளையல் போட்டுக் கொண்ட வானதி சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வானதி சீனிவாசன் வெட்கப்பட்டுக் கொண்டே வளையல் போட்டுக் கொண்ட நிகழ்வு பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.. அதைவிட அது தொடர்பாக வானதி நெகிழ்ந்து பதிவிட்ட ட்வீட் வைரலாகி கொண்டிருக்கிறது.

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனை பொறுத்தவரை தொகுதி மக்களுடன் எந்நேரமும் நெருங்கியே இருப்பவர்.. வெற்றி பெற்று எம்எல்ஏவான பிறகு, அவருக்கான பொறுப்புகள் அங்கு கூடிவிட்டன.

முதல்முறையாக எம்எல்ஏவாகி இருப்பதால், தெற்கு தொகுதி மக்கள் பூரிப்புடன் இருக்கிறார்கள்.. காலையில் இருந்து மாலை வரை ஓய்வின்றி, மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருபவர்..

அரவணைப்பு

அரவணைப்பு

இதற்காகவே விடிகாலையிலேயே தன்னுடைய தொகுதி பணியை ஆரம்பித்துவிடுவார்.. வானதியை தங்கள் தெருவில் பொதுமக்கள் பார்த்தவுடனேயே கையில் டீ கிளாசுடன் வந்துவிடுவார்கள்.. இதை பற்றி வானதியே ஒருமுறை ட்வீட் போட்டிருந்தார்.. "தொகுதி மக்களின் குறைகளை கேட்க அதிகாலை சென்றாலும் பாசத்துடன் தேநீர் அளிக்கும் சகோதரிகள்.. என்னை அன்பின் கதகதப்பில் அரவணைத்துக் கொள்கிறார்கள்" என்று நெகிழ்ந்து குறிப்பிட்டிருந்தார்..

பிரச்சாரம்

பிரச்சாரம்

இப்போதும் அப்படி ஒருபாசமழையை தொகுதி மக்கள் வானதி மீது பொழிந்துள்ளனர்.. நடக்க போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் கோவையிலும் சூடு பிடித்துள்ளது... எனவே, வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்களை திறந்து வைப்பது, பிரசாரம் செய்வது என்று வழக்கம்போலவே பிசியாக இருக்கிறார் வானதி சீனிவாசன்... இந்த நிலையில் கோவை தெற்குத் தொகுதியில் உள்ள மருதூர் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

 கோயில் விழா

கோயில் விழா

கிட்டத்தட்ட 300 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாம் அது.. அதனால், கோவில் முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.. இந்த விழாவில்தான் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.. கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட்டார்.. பிறகு கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகளுடன் கோயிலை விட்டு வெளியில் வந்தார்.. அப்போது கோவிலுக்கு வெளியே வளையல் கடை போட்டிருந்த பெண்கள் வானதியை பார்த்ததுமே கடைக்கு வருமாறு அழைத்தனர்.

 வளையல் கடை

வளையல் கடை

வானதியும் வளையல் கடைக்கு சென்றார்.. வானதி அந்த பெண்கள் மகிழ்ந்து போய், "ஏம்மா.. கோவிலுக்கு வந்துட்டு வளையல் போடாம போகலாமா? வாங்க கண்ணு?"என்று அவரது கையை பிடித்து செல்லமாக இழுத்தனர்.. வானதி அப்போது வெட்கப்பட்டுக் கொண்டே நிற்க, சில வளையல்களையும் எடுத்த அந்த பெண்கள், வானதிக்கு கையோடு மாட்டியும் விட்டனர்..

 வளையல் பெண்கள்

வளையல் பெண்கள்

அப்பெண்களின் அன்பிலும், உரிமையான பாசத்திலும் நெகிழ்ந்துவிட்டார் வானதி.. அவர்கள் மாட்டிவிட்ட வளையலுடன் வெட்கப்பட்டுக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.. இந்த நிகழ்வு வானதியின் மனதில் பதிந்துவிட்டது போலும்.. அதுதொடர்பாக ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.. அதில், "கோவிலுக்கு வந்துட்டு வளையல் போடாமையா?? வாங்க கண்ணு சகோதரிகளின் எளிமையான அன்பு என்னை ஓயாமல் இயங்க வைக்கிறது" என்று பதிவிட்டுள்ளார் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+