அமைதியாக பிறந்தது 2021.. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்லாயிரம் உயிர்களை குடித்த 2020 மறைந்தது.. அமைதியாக பிறந்தது 2021. இந்த புத்தாண்டை மக்கள் பூரிப்புடன் வரவேற்றனர். இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக அனைவருக்கும் இருக்க வேண்டும் என்று ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

கொரோனாவால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் கொண்டாட்டங்களே இல்லாத புத்தாண்டாக 2021 பிறந்துள்ளது. மக்கள் வீடுகளில் வானவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றார்கள். இருள் சூழ்ந்து காணப்படும் வானத்தை வாண வேடிக்கையால் வண்ணயமான வெளிச்சத்தை திறந்து வைத்து மக்கள் வரவேற்றார்கள். சமூக வலைதளங்களில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறினார்கள். பிடித்தவர்களுக்கு போனில் தொடர்பு கொண்டு வரவேற்று மகிழ்ந்தனர்.

happy new year to all, born 2021 in india, people celebrate in houses

காவல்துறையின் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி சாலைகளில் இளைஞர்கள் வாகனங்களில் அதிவேகத்தில் சீரிப்பாய்ந்து செல்வதை காணமுடிகிறது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று அவர்கள் போடும் சத்தம் விண்ணை பிளந்தது.

இந்த புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிக்கொடுக்கும் ஆண்டாக இருக்க வேண்டும். பாசிட்டிவ்வான சிந்தனைகளுடன் இந்தாண்டை அணுகுவோம். நெகட்டிவ்வான, மனதை பாதிக்கும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், முடிந்தவரை நல்ல சிந்தனைகளையும் நல்ல விஷயங்களையும் வரவேற்போம். அனைவருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+